வெனிசுவேலா எதிர்க்கட்சி ஒருங்கிணைப்பாளர் கைது

எதிர்க்கட்சி செயற்பாட்டாளர் றொலன்ட் கரென்னோ கைது செய்யப்பட்டதாக வெனிசுவேலாவின் சட்டமா அதிபர் தரேக் சாப் நேற்று தெரிவித்துள்ளார். பிரபல திடக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான கரென்னோவின் வலிந்த காணமலாக்கல் என நாடாளுமன்ற உறுப்பினர் குவான் குவைடோ விமர்சித்த சில மணித்தியாலங்களிலேயே குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கொரோனா இல்லாத மாவட்டம் எது?

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று (30) வரையிலும் 5606 ஆக இருந்தது. அவர்கள் எந்ததெந்த மாவட்டங்களில் இருக்கின்றனர் என்பது தொடர்பிலான விவரம். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எந்தவொரு நபரும் இல்லாத மாவட்டம், கிளிநொச்சி மாவட்டமாகும் என கொவிட்−19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாடு மையம் அனுப்பிவைத்துள்ள புள்ளிவிவரத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,105 ஆக அதிகரித்துள்ளது, அதில், 5804 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

தோழர் கிருஷ்ணா அஞ்சலி மரியாதை

மலையினும் வலிமையாய் ஈழப்போராட்டம் நோக்கி எழுந்து வந்த மலையகத்தோழர்களில்ஈரோஸ் தோழர் கிருஷ்ணா முதன்மையானவர்,…மாபெரும் அர்ப்பணங்களை விதைத்து விட்டு விடை பெற்று செல்லும் தோழனை சிரம் தாழ்த்தி வழியனுப்புவோம்!…தியாகங்களின் வரலாறுசகலருக்கும் சொந்தமாகவானம் போல் நீண்டு விரிந்தது!..அஞ்சலி மரியாதை!….

தீவிர சிகிச்சைப் பிரிவில் கபில்தேவ்

இந்திய அணிக்கு முதன்முறையாக உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த அணியின் தலைவர் கபில் தேவுக்கு  மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.அவர், புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று மட்டும் 609 பேருக்கு கொரோனா

இன்று மட்டும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 496 பேர் பேலியகொட மீன் சந்தையைச் சேர்ந்தவர்கள். 48 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களைச் சேர்ந்தவர்கள், காலி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த ஐவரும் பேருவளை மீன்பிடித் துறைகத்தில் இருபது பேரும் அவ்வாறவர்களுடன் ​நெருங்கிய தொடர்புகளை பேணியிருந்த 40 பேரும் அடங்குகின்றனர் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

20க்கு ஆதரவாக 156 வாக்குகள்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 156 வாக்குகள் கிடைத்தன. 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 65 வாக்குகள் கிடைத்தன. அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார்.

பொலிவிய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை உரிமை கோரிய சோஷலிசவாதிகள்

பொலிவியாவின் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது சுற்று வாக்களிப்பின் தேவையில்லாமல் அந்நாட்டின் சோஷலிச வேட்பாளரான லூயிஸ் அர்சே ஜனாதிபதித் தேர்தலில் வெல்வார் என உத்தியோகபூர்வமற்ற வாக்கெண்ணிக்கை நேற்று வெளிப்படுத்துகையில், அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி இவோ மொராலெஸின் இடதுசாரிக் கட்சி பதவிக்குத் திரும்புவதை அண்மித்துள்ளது.

மாநகர சபையையும் இழந்தார் மணி

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் பதவியை சட்டத்தரணி வி.மணிவண்ணன் இழந்துவிட்டாரென அறிவித்துள்ள யாழ்ப்பாணம் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகர் இ.கி.அமல்ராஜ், இது தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்து சென்றமையின் ஊடாக அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து பதியுதீனை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

சிக்கலுக்குள்ளாகும் அஸார்பைஜான், ஆர்மேனியயுத்தநிறுத்தம்

புதிய தாக்குதல்களை ஆரம்பித்ததாக அஸார்பைஜான், ஆர்மேனிய இனப் படைகள் ஒன்றையொன்று மாறி மாறி நேற்று குற்றஞ்சாட்டிய நிலையில், நாகொர்னோ-கரபாஹ் தொடர்பிலான கடும் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான இரண்டு நாள்கள் மனிதாபிமான யுத்தநிறுத்தம் மிகுந்த சிக்கலுக்குள்ளாகியுள்ளது.