கொரோனா தடுப்பு மருந்துக்கு உரிமை கோரும் இத்தாலி

கொரோனாவுக்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ள இத்தாலி விஞ்ஞானிகள், அதற்கு உரிமை கோரியுள்ளனர். கொரோனா தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ள டாகிஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் லூகி ஆரிஷியோ இதுபற்றி தகவல் வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ்: கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணியாற்றுகிறார்கள் தெரியுமா?

தென் ஆஃப்ரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கியூபாவில் இருந்து 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சென்றுள்ளனர். கம்யூனிஸ்ட் நாடான கியூபாவிடம் உதவி கேட்ட 22 நாடுகளுக்கு, ஏற்கனவே 1200 கியூபா மருத்துவ பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொது வெளியில் தோன்றினார் கிம் ஜோங்

வட கொரிய தலைவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து உலக நாடுகள் பலவாறு கருத்துகளை முன்வைத்து வந்தபோதிலும், அவர் 20 நாள்களின் பின்னர் நேற்று முதல் தடவையாக பொது வெளியில் தோன்றியிருப்பதாவும் தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில் அவர் பங்கேற்றுள்ளாரெனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமூக இடைவெளியை பேணும் பொருட்டு சந்தை இடமாற்றம்

ஊரடங்கு சட்டம் 12 நாள்களின் பின்னர் நேற்று (28) காலை தளர்த்தப்பட்ட நிலையில், அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில், மக்கள் சமூக இடைவெளியை பேணி பொருள்கொள்வனவில் ஈடுபட்டதை காண முடிந்தது.

தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு யாழில் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் அராலிதுறையில் உள்ள இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு அப்பகுதியிலுள்ள மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

‘கொரோனாவும் முதலாளித்துவமும்’- மதுரையில் இருந்தபடி புத்தகம் எழுதும் தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியனுக்கும், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் இடையே ஒரு பிணைப்பு உண்டு. 1991-ல் ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காக நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், இறந்தோர் பட்டியலில் தவறுதலாகக் குறிப்பிடப்பட்ட தா.பாண்டியன், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுதான் உயிர் பிழைத்தார். சமீபத்தில் உடல் நலம் குன்றியபோதும் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்ற அவர், வாரத்தில் மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்து கொள்வதும்கூட அங்கேதான்.

வூஹானில் கடைசி நோயாளியும் குணமடைந்தார்

முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட சீனாவின் வூஹான் நகரில், சிகிச்சையில் இருந்த கடைசி நோயாளியும் குணமடைந்ததாக சீனாவின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தோருக்கு பரிசோதனை

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தோருக்கான கொரோனா பரிசோதனையானது யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெறுகின்றன.

கோப்பாயில் பொலிஸார் குவிப்பு

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இரண்டு விடுதிகள் கோப்பாய் பிரதேசத்தில் கடமையாற்றி தற்போது விடுமுறையில் உள்ள இராணுவ வீரர்களை இருபத்தொரு நாள்கள் தனிமைப்படுத்துவதற்காக, நேற்று முன்தினம் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுருந்த நிலையில், நேற்றைய தினம் அந்த பகுதியில் பொது மக்களின் எதிர்ப்பு ஏதாவது ஏற்படலாம் என்ற ரீதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு, பொலிஸார் ரோந்து நடவடிக்கையும் பலப்படுத்தப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது. எனினும் அந்த இடத்தில் எந்தவொரு போராட்டமும் பொதுமக்களால் முன்னெடுக்கப்படவில்லை.