சோசலிஸ்டுகள் அபார வெற்றி இடதுசாரிப் பாதையில் போர்ச்சுக்கல்

போர்ச்சுகலில் கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் நல இடதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வந்த சோசலிஸ்டு கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது. அக்டோபர் 6 ஆம் தேதியன்று போர்ச்சுகல் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 230 தொகுதிகளுக்கு நடந்த இந்தத் தேர்தலில் சோசலிஸ்டு கட்சி 106 இடங் களைப் பெறுகிறது. கடந்த தேர்தலில் இக்கட்சிக்கு 85 இடங்கள் கிடைத்திருந்தன. போர்ச்சுகல் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக்குழு ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவில் கடந்த நான்கு ஆண்டுகளாக நிலையான ஆட்சி இருந்தது. இந்த முறையும், போர்ச்சுகல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 இடங்களும், இடதுசாரிக்குழுவுக்கு 19 இடங்களும் கிடைத்துள்ளன. சோச லிஸ்டு கட்சியின் தலைவரும், பிரதம ருமான அன்டோனியோ கோஸ்டா, இந்த இரண்டு கட்சிகளுடனான உறவு தொடரும் என்று அறிவித்துள்ளார்.

ரெலோவை கிழித்து தொங்கவிட்ட சிவாஜிலிங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோவின் முன்னாள் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை, ஜனாதிபதி தேர்தல் பந்தயத்திலிருந்து விலக்குவதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

சிறுவர் தினம்…ஆசிரியர் தினம்

இன்றைய ஆசிரியர் தினத்தில் நிலாவெளி ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலையில் மாணவர்களின் வாழ்வியலுக்கான அறத்தினை நெறிப்படுத்துகின்ற, தன்னலமற்ற சேவையை வழங்குகின்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு..ஐப்பசி 01ம் திகதி கடந்து சென்ற சிறுவர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாகவும், இன்று குழந்தைச்செல்வங்களுடன் இணைந்திருந்து கொண்டாடியதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இச்சந்தர்ப்பத்தில் எமது தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் திருகோணமலை மாவட்டச்செயலாளரும், நகரசபை உறுப்பினரும் ஆகிய சத்தியன் அவர்களும் கலந்துகொண்டார்.

ஊடகவியலாளர் சந்திப்பு இரத்து; இன்று மீண்டும் கலந்துரையாடல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் தொடர்பில் வெளியிடுவதற்காக இன்று (06) முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச சார்பில் கட்டுப்பணம்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று (04) முற்பகல், தேர்தல்கள் செயலகத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாச சார்பில் “அன்னம்” சின்னத்துக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்பணம் செலுத்தினார் துமிந்த நாகமுவ

முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் துமிந்த நாகமுவ, இன்று (04) தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று காலை அவர், ஜனாதிபதி தேர்தலுக்கான தனது கட்டுப்பாணத்தை செலுத்தியுள்ளார். இதன்போது, முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் சேனாதீர குணதிலக மற்றும் சமீர கொஸ்வத்த ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, கோட்டாவுக்குத் தடையில்லை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கைப் பிரஜாவுரிமையை சவாலுக்கு உட்படுத்தி, மேன்​முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனு, மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவால், சற்று முன்னர் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டது.

‘மொட்டினை விட்டுகொடுக்காவிட்டால் சனிக்கிழமை முக்கிய தீர்மானம்’

தாமரை மொட்டினை தவிர வேறு பொதுச்சின்னத்தின் கீழ், புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பினர் முன்வராவிட்டால், தமது தரப்பினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.