இலங்கை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்; தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. மாலை சுமார் 5:15 மணியளவில், வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

தமிழர்கள் உட்பட 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்; இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச, சஜித் பிரேமதாச இடையே கடும் போட்டி

இலங்கையின் 8-வது அதிபரை தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி அந்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தேர்தலில் கோத்தபய ராஜபக்சவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஜனாதிபதித் தேர்தல்; வாக்களிப்பு ஆரம்பம்

பிரசாரங்கள் ஓய்ந்து, மௌன காலம் அமுலிலிருக்கும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் வன்முறைகள் எவையும் நேற்றுமாலை வரையிலும் பதிவாகவில்லையென தேர்தல்கள் கண்காணிப்பு குழுக்கள் அறிவித்துள்ளன.

ஆறடி வெள்ளத்தில் மிதக்கும் நூறு தீவுகள் கொண்ட வெனிஸ் நகரம்

உலக புகழ் பெற்ற இத்தாலிய நகரமான வெனிஸ், ஆறடி வெள்ளத்தில் தத்தளிப்பதால், அதன் பழமையான கட்டடங்கள் நீர் சூழ்ந்து காணப்படுவதை தொடர்ந்து அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஹிலாரி?

ஐக்கிய அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சவாலுக்குட்படுத்துமாறு மிகுந்த அழுத்தத்துக்குள் உள்ளதாக, ஐக்கிய அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

ஸ்பெய்ன் நாடாளுமன்றத் தேர்தலில் சோஷலிசக் கட்சிக்கு அதிக ஆசனங்கள்

ஸ்பெய்னில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெட்ரோ சந்தேஸின் சோஷலிச தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. எவ்வாறெனினும், தீவிர வலதுசாரிக் கொள்கைகளையுடைய வொக்ஸ் கட்சியும் குறிப்பிடத்தக்களவு ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், ஸ்பெய்னின் அரசியல் நெருக்கடி நிலை நீளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொலிவிய ஜனாதிபதியாக தன்னை பிரகடனப்படுத்திய செனட்டின் பிரதி சபாநாயகர்

பொலிவியாவின் புதிய இடைக்கால ஜனாதிபதியாக தன்னை செனட்டின் பிரதி சபாநாயகரான ஜெனி அனெஸ் நேற்று அறிவித்துள்ளார். பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி இவா மொராலெஸின் கடந்த ஞாயிற்றுக்கிழமை இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக்கவும், எதிர்க்கட்சி செனட்டரான ஜெனி அனஸை இடைக்கால ஜனாதிபதியாக உறுதிப்படுத்தவும் செனட் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

மெக்ஸிக்கோ பயணமாகும் இவா மொராலெஸ்

அரசியல் தஞ்சத்துக்காக இலங்கை நேரப்படி இன்று காலையில் மெக்ஸிக்கோவுக்கு அந்நாட்டு இராணுவ விமானத்தில், மத்திய பொலிவிய நகரான சிமோரேயிலிருந்து பொலிவிய ஜனாதிபதி இவா மொராலெஸ் பயணமாகியிருந்தார்.

விடுதலைப் புலிகள் மீதான தடை 5 வருடங்களுக்கு நீட்டிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 வருடங்கள் நீட்டிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை நிகழ்ந்த பிறகு, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இந்திய மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்து, தொடர்ந்து அதை நீட்டித்து வருகிறது.

‘போர்குற்றம் பற்றி பேசுவதற்கு த.தே.கூவுக்கு தகுதியில்லை’

“சரத் பொன்சேகாவை எப்பொழுது ஆதரித்ததோ அப்பொழுதே போர்க்குற்றம் தொடர்பாக பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகுதியை இழந்துவிட்டது” என, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தின் தெரிவித்தார்.