ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது குறித்து சர்ச்சைப் பேச்சு: கைதாகிறாரா சீமான்?

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர்க் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

மக்களோடு மக்களாய்

ஈச்சலம்பற்று முட்டிசேனை மாவடிச்சேனை கங்குவெளி போன்ற கிராமத்தில் முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர்வரதராஜபெருமாள் மக்கள் பிரச்சனையை கேட்டுக்கொ‌ண்டு‌ள்ள வேளை

புத்தளம் -மன்னார் பழைய வீதிக்கு பூட்டு

புத்தளம் -மன்னார் பழைய வீதி, மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடப்பட்டுள்ளதாக, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த வீதியானது இன்று(14) முதல் இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

நடுக்கடலில் மரணித்த மீனவருக்கு சபையில் அனுதாபம்

நடுக்கடலில் மரணித்த காரைதீவு மீனவர் சிறிகிருஸ்ணனுக்கு, காரைதீவு பிரதேச சபையில் அனுதாபம் நிறைவேற்றப்பட்டதுடன், அவரது மூன்று பெண் பிள்ளைகளில் ஒருவருக்கு தற்காலிக சிற்றூழியர் தொழிலொன்றை வழங்கவும் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காரைதீவு பிரதேச சபையின் 20ஆவது மாதாந்த அமர்வு, சபை மேயர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில், சபாமண்டபத்தில் இன்று (14) நடைபெற்றது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெண்உறுப்பினர் திருமதி சின்னையா ஜெயராணி, “மரணித்த மீனவரின் குடும்பத்துக்கு உண்மையில் உதவ வேண்டுமானால் மீண்டும் நிதி வழங்குவதை விடுத்து, பிள்ளைகளில் ஒருவருக்கு ஒரு சிறுதொழிலையாவது வழங்குங்கள். அது அக்குடும்பத்துக்கு பேருதவியாகவிருக்கும்” என்ற விசேட பிரேரணையை முன்வைத்தார்.

இப்பிரேரணையை, தவிசாளர் உள்ளிட்ட 11 உறுப்பினர்கள் மனிதாபிமானத்தோடு கையை உயர்த்தி ஆதரித்தனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் 17 ஆம் திகதி திறப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. நிர்மானப்பணிகள் இடம்பெற்றுவரும் யாழ்ப்பாணம் விமான நிலையத்தை பார்வையிடுவதற்காக அங்கு சென்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ரகவனுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் விமான நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது. விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் இந்தியாவுக்கான விமான சேவைகள் முதலில் இடம்பெறவுள்ளன.

அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமருக்கு அறிவிப்பு

எத்தியோப்பிய நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு (Abiy Ahmed Ali) 2019ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியோருக்கு நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டதுடன், இந்த விருதுகளில் மிகவும் உயரியதாக கருதப்படும் அமைதிக்கான நோபல் விருது எத்தியோப்பிய நாட்டின் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் நிர்ணய சபை எனும் UNP நாடகமும் TNA யினரது சோரம் போன அணுகுமுறையும்:

தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை நல்லாட்சி அரசினர் நிறைவேற்றுவார்கள் என்கின்ற உறுதி மொழியோடு மக்களிடம் வந்து பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கில் 16 ஆசங்களை தமதாக்கி பாராளுமன்றத்தில் நல்லாட்சியினரின் அனுசரணையுடன் எதிர்கட்சி தலைமை உட்பட பல பதவிகளை பெற்றுக்கொண்டனர். குறிப்பாக சுமந்திரன் இலாகா இல்லாத முக்கிய மந்திரி போன்றே செயற்பட்டு வந்தார். ஸ்ரீ லங்கா அரசின் மீதிருந்த மேற்கு நாடுகளின் அழுத்தத்தை நீர்த்து போக செய்ததில் சுமந்திரனின் பங்கு மிகவும் பிரதானமானது. சுமந்திரன் பிரதமரின் விசேட பிரதானியாகவே இந்த விடயத்தில் செயற்பட்டார். இவர் கடந்த நாலரை வருடங்களாக அலரி மாளிகையின் செல்வாக்கு மிக்க செல்லப்பிள்ளை.

எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகளின்படி, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியுள்ளது.

’சிவாஜிலிங்கத்துக்கு எனது சொந்தப் பணத்திலேயே கட்டுப்பணம் செலுத்தினேன்’

ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு, தனது சொந்தப் பணத்திலேயே கட்டுப்பணம் செலுத்தியதாகத் தெரிவித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், மாறாக நான் எந்தவொரு ராஜபக்ஷ ஆட்களையும் சந்திக்கவில்லையெனவும் தான் ராஜபக்ஷ தரப்புகளை சந்தித்தேன்; அவர்களின் பின்னணியில் தான் இயங்குகிறேன் எனக் குற்றம் சுமத்துபவர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்குமாறும் சவால் விடுத்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கோட்டாவுக்கு ஆதரவு

“ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கே ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது” என, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.