பெய்ஜிங்கில் புதிய விமானநிலையம் திறப்பு

உலகின் மிகவும் பரபரப்பாக இயங்கக்கூடிய விமானநிலையமொன்றாக வரும் என எதிர்பார்க்கப்படும் மிகவும் நவீன வடிவமைப்புகளைக் கொண்ட புதிய விமானநிலையமொன்றை சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இன்று (25) திறந்து வைத்துள்ளார். நட்சத்திர மீன் வடிவிலான இந்த பெய்ஜிங் டக்ஸிங் சர்வதேச விமானநிலையமானது 2040ஆம் ஆண்டில் எட்டு ஓடுபாதைகளுடனும், ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளை பெறுமளவுக்கு தனது முழுக் கொள்ளவுடன் 2040ஆம் ஆண்டில் இயங்கவுள்ளது.

சீரற்ற வானிலையால் 11,387 குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற வானிலையால் காரணமாக 11387 குடும்பங்களை சேர்ந்த 45,091பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு, காலி, மாத்தறை, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு – கிழக்கில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நேற்று (23) தீர்ப்பு வழங்கியது.

இராணுவ தளபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டமொன்று, இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக சுழற்சி முறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே, குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

யாழில் ஷவேந்திர சில்வா

இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்தபோது, தற்போது யாழ்ப்பாணம் ஆரிய வேதம் வரை விஜயத்தை மேற்கொண்டு, அங்கு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டார். அத்துடன், நல்லூர்க் கந்தன் கோவிலி்ல் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். நல்லை ஆதினத்துக்கு விஜயம் மேற்கொண்ட இராணுவ தளபதி, நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து கலந்துரையாடினார்.

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் யாழில் அதிபர் கைது

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலன், கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை மாணவர் ஒருவரை இணைத்துக்கொள்வதற்கான 1 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் அவர் இன்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கையூட்டுப் பெற்றுக்கொண்ட போதிய ஆதாரங்களுடன் இன்று நண்பகல் அவர் கைது செய்யப்பட்டார் என்று ஆணைக்குழுவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுக தமிழ்

(Arun Ambalavanar)

தமிழரசுக்கட்சியின் 60 களின் சத்தியாகிரகம் பின்னர் 70 களில் கூட்டணியினராகி தமிழீழ கோரிக்கை என்பதற்கான ஒரு சமூக அரசியல் பின்னணி இருந்தது. அமிர்தலிங்கம் போன்றவர்கள் இளம் வயதிலேயே போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்தி ரோட்டுக்கு வந்தவர்கள். அரசியலால் எல்லாவற்றையும் இழந்தவர்கள். அவர்களின் அரசியலில் விமர்சனம் இருப்பினும் அவர்களில் பலர் தம்மை தாம் கொண்ட அரசியலுக்காக இழந்தவர்கள். அதற்காக முற்றாக உழைத்தவர்கள். அவர்க்ளது ஒரு சில தவறுகள் ஆயுத போராட்டத்திற்கான காரணிகளில் ஒன்றெனினும் அது மட்டும் காரணமல்ல. இலங்கை அரசின் 83 வெறித்தனமே மூல காரணமானது ஆனால் தமது பதவிக்காலம் வரைக்கும் இலங்கை அரசயந்திரத்தின் ஏவலாளாக இருந்து பயங்கர வாத சட்டத்தின் கீழ் பல இளைஞர்களுக்கு தண்டனை கொடுத்த விக்கி தான் ஓய்வு பெற்ற பின் எழுக தமிழ் என கொடிபிடிப்பது போன்ற அபத்தம் எதுவுமில்லை

‘கடிதத்துக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை’

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எழுத்துமூலம் அறிவித்த போதும், அதற்கான பதில் இதுவரை தனக்கு கிடைக்கப்பெறவில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

‘விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய வேண்டும்’

அரசியல் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் எனும் அடிப்படையில் உணவும் சுதந்திரமாக இருக்க வேண்டுமெனத் தெரிவித்த வடக்குமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து தீவிரமாக ஆராய வேண்டுமெனவும் கூறினார்.