ரௌத்திரம் பழகு

“திருமணமாகி ஒன்பதே நாட்களான மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறான் கணவன்” என்ற செய்தி தொடர்பான ஆதங்கத்தை, சென்ற வாரம் எனது முகநூல் பக்கத்தில் பகர்ந்தேன்.

கருணா செய்ததையே இன்று விக்னேஸ்வரன் செய்கிறார்

(என்.ராஜ்)

“கருணா செய்த வேலையை தான் இன்று விக்னேஸ்வரன் செய்திருக்கிறார்” என, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். யாழில், இன்று நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்களை காக்க பிறந்தவர்க்கு இதயம் கணத்த கண்ணீர் அஞ்சலி

கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த அனுஜித், ஐ.டி.ஐ படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ரயில் தண்டவாளத்தை கடந்து சென்ற சமயத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலைக் கண்டார். அந்த வழியாக ரயிலும் வந்தது. உடனே, அந்த மாணவர் தனது கையில் இருந்த சிவப்பு நிற புத்தக பையை தூக்கி பிடித்தபடி

நண்பர் வீரகத்தி சேந்தன் நினைவாக:

வெற்றிடம் நிச்சயம் நிரப்பப்படும்!

கரவெட்டியைச் சேர்ந்த வீரகத்தி சேந்தன் அவர்களின் உயிர் இரண்டு நாட்களுக்கு முன்னர் – யூன் 12ஆம் திகதி – அவரது உடலை விட்டுச் சென்றுவிட்டது. பூதவுடலும் இரண்டொரு நாட்களில் அழிக்கப்பட்டுவிடும். இது நம் எல்லோருக்கும் ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் நிகழ்வுதான்.

ஏன் அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது?

இந்தியாவில் கரோனாவுக்குப் பலியான முதல் மக்கள் பிரதிநிதி என்பதால் மட்டும் அல்ல; வேறு ஒரு விஷயத்துக்காகவும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரான அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது. தமிழ்நாட்டின் பொதுப்புத்தியில் அரசியலர்கள் மீது உருவாக்கப்பட்டிருக்கும் மோசமான பிம்பத்தின் மீது இந்த மரணம் தாக்குதல் நடத்துகிறது. அது முக்கியமானது.

அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தின் குறியீடு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அதிகாரம், என்றென்றைக்கும் ஆனதல்ல மாற்றங்கள் வந்தே தீரும். உலக வரலாற்றில், நிலைத்திருந்த சாம்ராஜ்யங்கள் என்று எதுவும் இல்லை. கிரேக்கர் தொடங்கி, அமெரிக்கர் வரை யாரும் விதிவிலக்கல்ல.

நான் அறிந்த வரை……

(Amirthalingam Baheerathan)

இன்று இங்கிலாந்தில் கோவிட்-19 தொற்றை தடுக்க மேலும் மூன்று வாரங்களுக்கு சமூக தனிமை நீடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் இந் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் சமூக தனிமை ஒரளவு தளர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக தொற்றும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது என ஐரோப்பாவில் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதற்கான ஆதாரங்கள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வண்ணம் வெளிப்படையாக தெரியவில்லை.

பேரிடர் காலம்: இது கொண்டாட்டத்திற்குரிய காலம் அல்ல….

(சாகரன்)

உயிரினங்கள் இயல்பில் கொண்டாட்ட குணாம்சங்களை தன்னகத்தே அதிகம் கொணடவைதான். தென்றல் காற்றுத் தாலாட்டை ரசிக்காத மரங்கள் இல்லை. தனது இன விருத்திக்கான மகரந்த சேர்க்கையை வரவேற்று தலையை ஆட்டி அவைகள் கொண்டாடும்.