‘இமாலய துரோகிகள்’ எனத் தெரிவித்து புகைப்படங்கள் மீது முட்டை வீச்சு

வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் ஆரம்பித்து 2500 ஆவது நாளான திங்கட்கிழமை (25) உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படம் தாங்கிய பதாகையின் மீது முட்டை வீசி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தனர். 

போர் நிறுத்தத்திற்கு தயாராகும் புட்டின்

ரஷ்யா கடந்த ஆண்டு தனது அண்டை நாடுகளில் ஒன்றான உக்ரேன்  மீது போர் தொடுத்தது. அந்த போர் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படைகள் கணிசமான இடத்தை தங்கள் வசம் கைப்பற்றி வைத்துள்ளன. என்றாலும் உக்ரைனை இது வரை ரஷ்யாவால் பணிய வைக்க இயலவில்லை.

“இயேசு நாதரின் பிறந்த தினம் எனது இறப்பு தினமாக அமையட்டும்”

மட்டக்களப்பில் தொழில் இல்லாத காரணத்தால் நத்தாருக்கு பிள்ளைகள் மனைவிக்கு ஆடைவாங்கி கொடுக்க முடியாமல் மனமுடைந்த 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர் “இயேசு நாதரின் பிறந்த தினம்  எனது  இறப்பு தினமான அமைய வேண்டும்” எனக் கூறி தற்கொலை செய்வதற்காக கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்த நிலையில் காப்பாற்றப்பட்ட  சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (24) இரவு 11 மணிக்கு இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை கருத்தில் கொள்ளாத ‘இமயமலை பிரகடனம்

(லக்ஸ்மன்)

இலங்கைக்கு உள்ளேயும், நாட்டுக்கு வெளியேயுள்ள புலம்பெயர் தேசங்களிலுமென இமயமலைப் பிரகடனம் விமர்சிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வருகின்றது. தமிழ் மக்களின் நிலைப்பாடுகளைக் கருத்தில் கொள்ளாத “இமயமலை பிரகடனம்” என்றே அதன் மீதான விமர்சனங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

மீண்டும் முகக்கவசம் அணியுங்கள்

மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியவேண்டும் என  ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

’யுக்திய’வில் இதுவரையில் 13,666 பேர் கைது

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையான ‘யுக்திய’ சுற்றிவளைப்பு திட்டத்தின் போது 13,666 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மல்வத்து ஓயாவைத் தேடி….

(Thulanchanan Viveganandarajah)

கடந்த மாதம் இலங்கை அரச திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் வெளியிடப்பட்ட “மல்வத்து ஓயாவைத் தேடி” (மல்வத்து ஒய சொய) என்ற ஆவணப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இலங்கையின் இரண்டாவது நீளமான ஆறான மல்வத்து ஓயாவின் வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டும் சிங்கள – ஆங்கில இருமொழி ஆவணப்படம் அது.

மதிப்புக்குரிய தர்மசிறி பண்டாரநாயக்க…!

(அ.யேசுராசா)

நேற்று இரவு, யாழ்ப்பாணம் ‘றீகல்’ திரையரங்கில் நடைபெற்ற – 9 ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில், வாழ்நாள் சாதனைக்கான விருது, புகழ்பெற்ற சிங்களத் திரைப்பட நெறியாளர் தர்மசிறி பண்டாரநாயக்கவுக்கு வழங்கப்பட்டது! ; மிக்க மகிழ்ச்சியைத் தருவ தாக அது இருக்கிறது! அவருக்கு எனது இதயபூர்வமான வாழ்த்து!

பின்வாங்க போவதில்லை; அமைச்சர் அதிரடி

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு எந்தவொரு அழுத்தங்கள் வந்தாலும், ஒரு அடி கூட பின்வாங்கப் போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு வடக்கு மோதரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமூக பொலிஸ் குழுக்களை வலுவூட்டும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (20) பிற்பகல் முத்துவெல்ல விளையாட்டரங்கில் நடைபெற்றது.