ஈரானில் குண்டு வெடிப்பு: 103 பேர் பலி

ஈரானில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 103 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 141 பேர் காயமடைந்துள்ளனர். கெர்மான் பகுதியில் உள்ள ஈரானின் முன்னாள் தளபதி காசிம் சுலைமானின் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன. காசிம் சுலைமானின் நினைவு நாளை அனுசரிக்க ஏராளமானோர் கூடியிருந்தபோது, குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மதுபான சாலையை அகற்ற கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலையை அகற்ற கோரி இன்றைய தினம் (03) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உடுப்பிட்டி சந்தியில் நடைபெற்ற குறித்த போராட்டத்திக்கு வலுச்சேர்க்கும் வகையில் உடுப்பிட்டி பகுதியில் கடைகளையடைத்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் இறுதியில் பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்று ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கப்படவுள்ளதுடன் அதன் பிரதிகள் பல்வேறு தரப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்படுமா?

இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. இப்போதும் கூட ஆளும் கட்சியினர் ஏனைய அரசியல் குழுக்கள் மற்றும் கட்சிகளுடன் இது தொடர்பில் சில கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எவ்வாறாயினும், பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் இதுவரையில் எவ்வித ஆயத்தங்களும் இடம்பெறவில்லை என பாராளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உச்சம் தொட்ட மீன்களின் விலை

சந்தையில் மீன்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் என்றும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி சந்தைகளில் கெளவல்ல மீன் 2,400 ரூபாய் முதல் 2,600 ரூபாய் வரையிலும், தலபத் மீன் 3,200 ரூபாய் முதல் 3,400 ரூபாய் வரையிலும், சால மீன் 650 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. அதேநேரம், அட்டவல்ல 1,500 ரூபாவாகவும், லின்னோ 1,000 ரூபாவாகவும், இறால் 1,600 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைவருக்கும் புது ‘வரி’ச வாழ்த்துகள்

புலம்பெயர் நாடொன்றில் இருந்துகொண்டு இலங்கையில் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாட்டாளர்களுக்கு பின்வரும் குறிப்புக்கள் உதவக்கூடும். பின்னூட்டங்களும் சேர்ந்தே பதிவு முழுமைபெறும் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

நிலநடுக்கத்தால் நகர்ந்த ஜப்பான் நிலப்பரப்பு

ஆங்கில புத்தாண்டு தினத்தில் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் மிக கடுமையான நிலநடுக்கம் ஜப்பானை ஒருவழியாக்கியது. ஜப்பானில் ஜனவரி      1-ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 7.5 ஆக பதிவானது. இதன் காரணமாக அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் சுனாமி அலைகளால் ஊருக்குள் கடல் நீர் புகுந்தது.

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் – ’’மனித ஆட்கொலை’’

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம் “மனித ஆட்கொலை” என யாழ்.நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (02)  தீர்ப்பளித்துள்ளது.

விமான நிலையங்களில் 28 பேர் அதிரடியாக நீக்கம்?

புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட விமான நிலைய கூட்டு தொழிற்சங்கத்தின் தலைவர் உட்பட கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயர் பதவிகளை வகித்த 28 தலைவர்களின் சேவைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நண்பகல் 12.00 மணி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன  என விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.

தேவை ஒரு தலைமைத்துவச் சங்கிலி

(மொஹமட் பாதுஷா )

இலங்கையின் தேசிய அரசியலையும் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியலையும் தொடர்ச்சியாக கூர்ந்து நோக்குவோர், இந்த நாட்டை அல்லது ஒரு இனக் குழுமத்தை ஆள்வதற்கான தலைமைத்துவச் சங்கிலியில் இடைவெளி ஒன்று காணப்படுகின்றமையை அவதானிப்பார்கள்.  

மகள்களை விற்கும் பெற்றோர்

பாகிஸ்தானில் 2024 பெப்ரவரி 8ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் அங்கு நிலைமை மோசமாக இருந்து வருகிறது. ஒருபுறம் பணவீக்கம் அதிகரித்து வரும் அதே வேளையில், மறுபுறம் மோசமான வானிலையால் விவசாயிகள் கடன் சுமையில் சிக்கித் தவிக்கின்றனர்.