லெபனானில் மீண்டும் தாக்குதல்; 105 பேர் பலி; 350 பேர் காயம்

லெபனானில் மீண்டும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 105 பேர் கொல்லப்பட்டனர். 350க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் மழையில் பலியானோர் எண்ணிக்கை 170ஐ தாண்டியது

நேபாளத்தில் கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170ஐ தாண்டியுள்ளது. நேபாளத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் மட்டும் நேபாளத்தின் பல பகுதிகளில் 20 முதல் 30 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. மேலும் பல இடங்களில் வெள்ள நீர் காரணமாக நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன.

’’பல முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளன’’

விளையாட்டு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் செலவு செய்யப்பட்டமை குறித்த புள்ளிவிபரங்கள் உள்ள போதிலும் அதன் முன்னேற்றம் தொடர்பில் உரிய கணக்காய்வு நடத்தப்பட வேண்டுமெனவும், அதுதொடர்பில் உடனடியாக உள்ளக கணக்காய்வொன்று நடத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்தார்.

அநுரவுக்கு ருவாண்டா வாழ்த்து

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கு அனுப்பிய செய்தியில், இலங்கையின் 9வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு ருவாண்டா குடியரசு அரசாங்கம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. 

கிழக்கு ஆளுநர் கடமை பொறுப்பேற்பு

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (26) அன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.பேராசிரியரான ஆளுனரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் நவம்பர் 2023 வரை செயற்பட்டுள்ள இவர் கந்தளாய் அக்ரபோதி வித்தியாலய பழைய மாணவருமாவார். குறித்த நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி எஸ் ரத்நாயக்க, ஆளுனர் செயலக செயலாளர் எல்.பி மதநாயக்க, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண திணைக்கள தலைவர்கள் , தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

பெற்றோரிடமிருந்து பணம் வசூலிக்கக் கூடாது

உலக சிறுவர் தினம் மற்றும் உலக ஆசிரியர் தினம் போன்ற நிகழ்வுகளை கொண்டாடுவதற்கு பெற்றோரிடமிருந்து பணம் வசூலிக்கக் கூடாது என கல்வி அமைச்சு வலியுறுத்துகிறது. இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, அனைத்து அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு அறிவித்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

ஈ-விசா மோசடி குறித்து விரைவில் விசாரணை

சர்ச்சைக்குரிய “ஈ-விசா” மோசடி குறித்து அரசாங்கம் விசாரணையை ஆரம்பிக்க உள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து வெளிநாட்டு கூட்டமைப்பை விலக்கி, நிகழ்நிலை விசா விண்ணப்ப தளத்தை அரசாங்கம் மீள ஆரம்பித்துள்ளது.

O/L பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகின

2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் வெளியாகி உள்ளன. பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும்.

புலமைப்பரிசில் சர்ச்சை- முடிவு எட்டப்பட்டது

புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த மூன்று வினாக்களுக்கு அனைத்து தரம் 5 மாணவர்களுக்கும் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது. கசிவு குறித்து நிபுணர் குழுவின் விசாரணையைத் தொடர்ந்து, நேர்மையை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கையை எடுக்க அமைச்சகம் முடிவு செய்தது

கொடுப்பனவு நிறுத்தம் குறித்து விளக்கம்

பிரமுகர்கள் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட முப்படை வீரர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு நிறுத்தப்பட்டது தொடர்பான சமீபத்திய அறிக்கைகளை பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.