தமிழ் அரசியல் கைதிகள் ஐவர் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் ஐவர், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் பல்கலைக் கழகம்: மாணவர்களுக்கு இடையில் தொடரும் மோதல்

யாழ்ப்பாணம் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை கலவரம்; எமில் ரஞ்சனுக்கு மரண தண்டனை

கடந்த 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு விசேட மேல் நீதிமன்றம், இன்று (12)  தீர்ப்பளித்துள்ளது.

உக்ரைனில் அதிகரிக்கும் சீனாவின் புவிசார் அரசியல் முயற்சி

(Freelancer)

உக்ரைனில் சீனாவின் பன்முகத் தன்மை கொண்ட ஆர்வம், அதன் மூலோபாய புவியியல் இருப்பிடம், உயர்நிலை சோவியத் பாதுகாப்பு அமைப்புகளின் தொழில்நுட்பம் ஆகியவை பீஜிங்கின் செல்வாக்கை கீயேவில் அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

சிந்தித்துத் தீர்மானம் எடுப்பது நன்று

இலங்கையின் பெயர், இரண்டு சம்பவங்களால் உலகளாவிய ரீதிக்குச் சென்றிருந்தது என முன்னர் கூறியிருப்பதை கேள்விப்பட்டிருக்கின்றோம். அதிலொன்றுதான், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை படையினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தம். மற்றொன்று, 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை சுவீகரித்ததன் ஊடாக, நாட்டின் நாமம் உலகளவில் பிரபல்யமடைந்திருந்தது.

மூவருக்கு புதிய தொற்று புளோரோனா

மெக்சிகோ 3 பேருக்கு புளோரோனா எனப்படும் புதிய வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாத் தொற்று, டெல்டா, காமா மற்றும் ஒமிக்ரோன் என்று பல வகைகளில் உருமாற்றமடைந்து பரவியது. இந்நிலையில் தற்போது. புளோரோனா என்ற புதிய தொற்று சமீபத்தில் அடையளங்காணப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்குப் பின்னர் பாடசாலைகளைத் திறந்த உகாண்டா

கிழக்கு ஆபிரிக்க நாடான உகாண்டாவில் கொரோனாத் தொற்றுப்  பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து; சோகத்தில் மக்கள்

மியான்மரில் கடந்த 2017-ஆம் ஆண்டு இராணுவம் முன்னெடுத்த தாக்குதல் காரணமாக சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் பங்களாதேஷில் உள்ள அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

கணிசமாக உயர்ந்தது தொற்றாளர் எண்ணிக்கை. நாட்டில் மேலும் 623 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 593,072 ஆக அதிகரித்துள்ளது.

மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு

இரண்டு தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட மூன்று புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் புதிய லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவையே பதிவு செய்யப்பட்டுள்ன. 2022 ஆம் ஆண்டுக்கான புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.