விருதை திருப்பி அளித்த வைரமுத்து

கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கவுள்ளதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார். இவ் விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்தித்திருந்து. நானும் அதனை நன்றி பாராட்டி வரவேற்றேன்.

நான்காவது தடவையாக வென்ற அசாட்

சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட், 95.1 சதவீதமான வாக்குகளுடன் நான்காவது தடவையாக வென்றுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவை, செய்தியாளர் மாநாடொன்றில் சிரியப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஹம்மெளடா சப்பாஹ் நேற்று அறிவித்த நிலையில், 14 மில்லியனுக்கும் அதிகமான சிரியர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்ற நிலையில், 78 சதவீதமானோர் வாக்களித்ததாகக் கூறியுள்ளார்.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் ஆயிரத்து 434 ​பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 825ஆக அதிகரித்துள்ளது. 

வைரமுத்து கண்டனத்திற்குரியவராகிறார்

(Prabahar Vedamanickam)

இரண்டு விதங்களில் வைரமுத்து கண்டனத்திற்குரியவராகிறார். ஒன்று பாலியல் அற்பத்தனங்கள். அதற்கான விலையை வாழ்நாள் முழுதும் செலுத்த வேண்டியவராகிவிட்டார். இது குறித்து வைரமுத்துவை ஆதரிப்பதற்கு எந்தவித முகாந்திரங்களும் இருக்க முடியாது.

அரசியல் செய்வதற்கு இது உகந்த நேரமில்லை: அதிமுகவினருக்கு அமைச்சர் பி.மூர்த்தி கண்டிப்பு

‘‘அரசியல் செய்வதற்கு இது உகந்த நேரமில்லை, ’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமாருக்கு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார்.

புத்தி இல்லாத சனக்கூட்டம்

அபாயக் கழிவுகளை அள்ளும் சுயபுத்தி இல்லாத சனக்கூட்டம்

எந்தவொரு தொழிற்றுறையைச் சேர்ந்தவர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் அதன்தாக்கம் மூக்கை அரிக்காது. ஆனால், தூய்மைப் பணியாளர்கள் இரண்டு நாள்களுக்கு நேரம் சுணங்கிவிடின், அப்பகுதியே நாற்றமெடுக்கும். ஆனாலும், தூய்மைப் பணியாளர்கள், கழிவுகளை வகைப்பிரித்து அகற்றிச்செல்வர்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகளை, அவ்வாறே, ஜுன் 7ஆம் திகதி வரையிலும் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 31ஆம் திகதி மற்றும் அடுத்த மாதம் 4ஆம் திகதிகளில் பயணக்கட்டுபாடு தளர்த்தப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குறித்த நாள்களில் பயணக்கட்டுபாடு தளர்த்தப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் – 6)


2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை முதலமைச்சராக கொண்டு வடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கியதை அடுத்து ஒரு சில மாதங்களுக்குள் எழுதப்பட்டதே இக்கடிதத் தொடர். இதில் 12 கடிதங்கள் உள்ளன. இவை முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ்.நெற்.கொம், சூத்திரம்.கொம், தேனீ.கொம் ஆகிய இணையத் தளங்களில் வெளியிடப்பட்டவை. இக்கடிதங்கள் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் சமூக விடயங்களோடு தொடர்பு பட்டவர்களின் கவனிப்புக்கும் கருத்துக்கும் பொருத்தமானவை என்று எண்ணுகிறேன் . எனவே இக்கடிதத் தொடரை இங்கு ஒவ்வொன்றாக மீள்பதிவு செய்கிறேன்.

கொரோனா கட்டுப்பாடுகளும் குளறுபடிகளும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலம், மக்களை நாளாந்தம் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளொன்றுக்கு 3,000 என்கிற அளவைத் தொட்டிருக்கின்றது; உயிரிழப்புகளும் 30 என்கிற அளவில் ஒவ்வொரு நாளும் பதிவாகின்றது. உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு அப்பால், தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, இன்னும் அதிகமிருக்கலாம் என்பது, சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட தரப்புகளின் அச்சமாகி இருக்கிறது.

இலங்கை: கொரனா செய்திகள்

காலி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் இன்று(27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான அறிவுறுத்தலை ஜனாதிபதி வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார். குறித்த மூன்று மாவட்டங்களிலும், தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.