எம்.ஜி பசீர் முன்னாள் யாழ்,மாநகர சபை உதவி மேயர் காலமாகிவிட்டார்.

(Ajmal Mohideen)

எம்.ஜி பசீர் முன்னாள் யாழ்,மாநகர சபை உதவி மேயர் நேற்று இரவு (12/02/2021) புத்தளம் வைத்திய சாலையில் காலமாகி இன்று (13/02/2021)காலை 10.30 மணியளவில் புத்தளத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். எமது குடும்ப நண்பரும் என்னோடு மிக அதிகமான தொடர்புள்ளவராகவும் இருந்தார்.

பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும், இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்!

(Malathi Maithri)

மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீத்திக் கொள்பவர்கள் யாரிடமாவது பதில் இருக்கிறதா?

ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரை

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை: கொரனா நிலவரம்

நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா தொற்றானது, சைப்பிரஸ், ஜோர்தான், டுபாய் ஆகிய நாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் மூலம் பரவியுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் குறைந்து செல்லும் கொரோனா உயிரிழப்புகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று மட்டும் 90 பேர் உயிரிழந்தனர்.இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கவர்ச்சியான வங்குரோத்து அரசியல்

(என்.கே. அஷோக்பரன்)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான், தன்னுடைய காலத்தைய ஒத்த, வடக்கு-கிழக்குத் தமிழ்த் தலைமைகள் பற்றிக் கருத்துரைக்கும்போது, குறிப்பாக, அன்றைய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களைப் பற்றிக் கூறும்போது, “அவர்கள், தமது வழக்கை, மிகச் சிறப்பான வகையில் வாதிடவல்ல சட்டத்தரணிகள்; ஆனால், அவர்களுக்கு அர்த்தமுள்ள சலுகைகளை ஈர்த்து எடுத்துக்கொள்ளத் தெரியாது” என்று கூறியதாகச் சில பதிவுகள் கிடைக்கின்றன.

ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் கடந்த ஒரு வருடமாக எதெல்லாம் நடந்திருக்காது?

முதலில் பதிலளிக்கப்பட்டது: ஜெயலலிதா இருந்திருந்தால் தமிழ்நாட்டில் கடந்த ஒரு வருடமாக எதெல்லாம் நடந்திருக்காது ? ‘ஜெயலலிதா உயிரோடு இருந்தால் ஜெயிலில் இருந்திருப்பார்’ அதை விட்டுத்தள்ளுங்கள் ஒருவேளை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்திருந்தால் கடந்த ஓராண்டில்,

இலங்கை விடயத்தில் சீனா

இப்பொழுது மட்டுமல்ல, எப்போதும் இலங்கையில் சீனா, இன ரீதியாக யாரோடும் எந்தத் தரப்புகளோடும் உறவாடல்களை வைத்துக் கொண்டதல்ல. அரசியல் விவகாரங்களைக் கையாண்டதுமில்லை.
சீனாவினுடைய அரசியலும் அணுகுமுறையும் வேறு. அது நீண்ட கால நோக்கில், தன்னுடைய வளர்ச்சிக்கேற்ப விஸ்தரிப்பைச் செய்யும் அடிப்படைகளைக் கொண்டது. அதற்கமைய விடயங்களைக் கையாள்வது. இதற்குள் சில நாடுகள் தாமாகவே சிக்கிக் கொள்வதுண்டு. சிலவற்றைச் சீனா மடக்கிப் பிடிப்பதுண்டு. இலங்கையில் முதலாவது வகையான தானாகவே சிக்கிக் கொண்ட நிலைமையே நடந்து கொண்டிருக்கிறது.

சீனாவிடமிருந்து இந்தியாவின் கைகளுக்குச் சென்ற யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி திட்டம்!

சீனாவின் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் மேற்கொள்ளப்படவிருந்த காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் தற்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். விமான நிலைய மேம்பாடுகள்: மீண்டும் பேச்சுவார்த்தை

யாழ்ப்பாணம் விமான நிலைய மேம்பாடுகள் மற்றும் அபிவிருத்திகள் குறித்து இந்தியா-இலங்கை இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அடுத்தவாரமளவில் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. இதன்போது, விமான நிலையத்தின் வளர்ச்சியில் இந்திய முதலீடு, இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.