தமிழ்ச் சமூகத்தில் சாதியம்; பேசாப் பொருளை பேச நாம் துணிவோமா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையின் வடபுலத்தில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒக்டோபர் மாதம் மகத்தானதுதான். இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன்னர், ஓர் ஒக்டோபரில், வடபுலத்தில் ஓர் எழுச்சி ஏற்பட்டது. சாதியத்துக்கும் தீண்டாமைக்கும் எதிரான வெகுசன இயக்கம், 1966ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி, வடக்கில் ஏற்படுத்திய எழுச்சியே, தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமானது. அவ்வகையில் ஓக்டோபர் மாத நினைவுகள் மகத்தானவை தான்.

கொரனாவின் 2 வது அலையை இலங்கை தாங்கிக் கொள்ளுமா…?


(சாகரன்)

கொரனா பெரும் தொற்று அரம்பித்து ஒரு வருடத்தை நோக்கிய கால நகர்வு அண்மித்துக் கொண்டிருக்கின்றது. சீனாவில் முதலில் இந்த வைரசிற்கான இருப்பு கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் ஏன் இன்று வரை சீனா மீதான வெறுப்பை கக்கும் பிரசாரங்களுக்கு மத்தியில் சீனா தனது நாட்டிற்குள் எடுத்த நிதானமான ஆனால் கடும் போக்கான சுகாதார நடவடிக்கைகள் 3 மாதத்திற்குள் அதனை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

பிரபாகரனையும் கொண்டாடுகள் ஆனால்….

Mathuran Raveendran

பிரபாகரனை நீங்கள் கொண்டாட முனைந்தால் அது உங்களது உரிமையே ! நீங்கள் தாராளமாக படம் எடுத்து கொண்டாடலாம். அதேபோல முரளி வரலாற்றை படமாக்க விரும்பியவர்களின் உரிமையையும் நீங்கள் மதித்திருக்கவேண்டும். உரிமை எல்லோருக்கும் சமமானதே.

தோழர் கிருஷ்ணா அஞ்சலி மரியாதை

மலையினும் வலிமையாய் ஈழப்போராட்டம் நோக்கி எழுந்து வந்த மலையகத்தோழர்களில்ஈரோஸ் தோழர் கிருஷ்ணா முதன்மையானவர்,…மாபெரும் அர்ப்பணங்களை விதைத்து விட்டு விடை பெற்று செல்லும் தோழனை சிரம் தாழ்த்தி வழியனுப்புவோம்!…தியாகங்களின் வரலாறுசகலருக்கும் சொந்தமாகவானம் போல் நீண்டு விரிந்தது!..அஞ்சலி மரியாதை!….

தீவிர சிகிச்சைப் பிரிவில் கபில்தேவ்

இந்திய அணிக்கு முதன்முறையாக உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த அணியின் தலைவர் கபில் தேவுக்கு  மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.அவர், புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று மட்டும் 609 பேருக்கு கொரோனா

இன்று மட்டும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 496 பேர் பேலியகொட மீன் சந்தையைச் சேர்ந்தவர்கள். 48 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களைச் சேர்ந்தவர்கள், காலி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த ஐவரும் பேருவளை மீன்பிடித் துறைகத்தில் இருபது பேரும் அவ்வாறவர்களுடன் ​நெருங்கிய தொடர்புகளை பேணியிருந்த 40 பேரும் அடங்குகின்றனர் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தீண்டாமைக்கு எதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சி ஊர்வலத்தின் 54ஆவது ஆண்டு நினைவாக…

சரியாக 54 ஆண்டுகளுக்கு முன்னர் 1966 ஒக்ரோபர் 21இல் “சாதி அமைப்பு தகரட்டும்! சமத்துவ நீதி ஓங்கட்டும்!!” என்ற விண்ணதிர்ந்த கோசங்களுடன் ஊர்வலம் ஒன்று இலங்கையின் வட பகுதி நகரான சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாண நகரை நோக்கிப் புறப்பட்டது. அந்த ஊர்வலத்தை நடத்தக்கூடாது என அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் பொலிசார் தடை விதித்தபோதும் ஊர்வலம் திட்டமிட்டவாறு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இலங்கை வடபகுதிக்கு குடிபெயர்ந்த மலையக தமிழர்களின் தொகை வீதம் .. பிரதேச வாரியாக

கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனம் செய்த ஆய்வு ஒன்றில் பின்வரும் அளவில் மலையகத் தமிழர்கள் வடக்கிலே வாழ்கின்றனர் என அறியமுடிகின்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப்பிரிவுக்கு 26 கிராம சேவகர் பிரிவுகளில் 15 கிராம சேவகர் பிரிவுகளில் 50 சதவீதத்துக்கு அதிகமானோர் மலையகத் தமிழர்களாக உள்ளனர்.

20க்கு ஆதரவாக 156 வாக்குகள்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 156 வாக்குகள் கிடைத்தன. 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 65 வாக்குகள் கிடைத்தன. அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார்.

பொலிவிய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை உரிமை கோரிய சோஷலிசவாதிகள்

பொலிவியாவின் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது சுற்று வாக்களிப்பின் தேவையில்லாமல் அந்நாட்டின் சோஷலிச வேட்பாளரான லூயிஸ் அர்சே ஜனாதிபதித் தேர்தலில் வெல்வார் என உத்தியோகபூர்வமற்ற வாக்கெண்ணிக்கை நேற்று வெளிப்படுத்துகையில், அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி இவோ மொராலெஸின் இடதுசாரிக் கட்சி பதவிக்குத் திரும்புவதை அண்மித்துள்ளது.