கொரனாவின் 2 வது அலையை இலங்கை தாங்கிக் கொள்ளுமா…?


கூடவே தனது சீரான பொருளாதார வளர்ச்சியில் தடை ஏற்படாத வண்ணம் முடங்கங்களையும் கையாண்டது. உலகின் பொருளாதார வல்லரசாக உற்பத்திகளின் அடிப்படையில் தன்னை தகவமைத்துக் கொண்ட சீனா இந்த பெரும் தொற்றிற்கான ஆரம்ப வைத்திய தேவைகளுக்கான பொருட்களின் விநியோகத்திலும் தன்னை தங்கியிருக்குமாறு சீனாவை கடுமையாக விமர்சிக்கும் நாடுகளான அமெரிக்கா பிரான்ஸ் போன்ற நாடுகளையும் வைத்திருப்பது இங்கு கவனிக்க தக்கது.


உலகின் முன்னேறிற பல நாடுகள் ஆரம்பத்தில் இந்த பெரும் தொற்றை சாதாரணமாக எடுத்துக் கொண்டமையினால் கட்டுக்குள் நிற்காமல் இது அங்கெல்லாம் எகிறிது. இதில் வழித்துக் கொண்ட சில நாடுகளின் துரித நடவடிக்கைகள் ஓரளவு இதனைக் கட்டிற்குள் கொண்டு வந்ததில் கணிசமான முற்றமும் கண்டன.


சீனா தனது நாட்டில் இந்த பெரும் தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதில் கியூப மருத்துவக் குழுவின் பங்களிப்பை பாராட்டியதை அமெரிக்கா போன்ற நாடுகள் அவ்வளவாக ரசிக்கவில்லை. தொடர்ந்தும் கியூபாவின் மருத்துவக் குழுவின் உதவி பெறுதலுக்கான தடையை தனது நட்பு நாடுகளுக்கு அப்பால் பொதுவில் விடுத்திருந்தது.


இதனை சட்டை செய்யாமல் செயற்பட்ட நாடுகளில் இன்று ஐரோபாவில் இந்தாலி கணிசமான கொரனா கட்டுப்படுத்தில் வெற்றியும் கண்டுள்ளது.


சிறிய நாடுகள் வரிசையில் இலங்கை இதனை மிகச் சிறப்பாக கையாண்டது என்ற வரிசையில் முன்னிலை வகித்திருந்தது. இதற்கு சீனாவின் ஆலோசனையம் இதனை ஏற்று செயற்பட்ட அரச இராணுவக் கட்டுப்பாட்டுச் தலமைச் செயற்பாடுகளும் காரணமாக அமைந்தன.
தற்போது உலகெங்கும் மருத்துவத்துறையினர் மேற்கோள் காட்டியபடி இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளதை புள்ளிவிரங்கள் காட்டி நிற்கின்றன.

இதற்கு வைரஸ் இன் சுய இயல்பிற்கு அப்பால் அவ் அவ் நாடுகளில் ஏற்படும் கால நிலை மாற்றமும் ஒரு காரணமாக இருக்கின்றது. கூடவே பொருளாதார ஸ்திரத் தன்மையை பேணுதல் என்ற வகையில் முடக்கத்தை திறந்து விட்டு இயல்பு நிலையை கொண்டு வருத்தல் என்பதால் ஏற்பட்ட தனி மனித இடைவெளியை பேணுவதில் ஏற்பட்ட குளறுபடிகள் முக்கிய காரணமாக அமைகின்றது.


தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்காத நிலையில் தனி மனித இடைவெளி, சுத்தமாக இருபதற் ஊடாக பரவலை தடுக்கலாம் என்ற இரு பொறி முறைகளுடன் மனித உடலில் எதிரப்;பு சக்தியை அதிகரித்தல் என்ற நாட்டிற்கு நாடு வேறுபட்ட உள்ளுர் அணுகுமுறைகள் மட்மே இது வரை பாவிக்கப்பட்டு வருகின்றன.


வறிய நாடுகளில் இந்த பெருந் தொற்றால் ஏற்பட்ட வேலையின்மை அதனைத் தொடர்ந்த பொருளாதாரச் சி;க்கல் தனிமனி வறுமையை அதிகரிகச் செய்து ‘சோத்துக்காக” வீதியில் வலிந்து இறங்கும் நிலையை எற்படுத்தியிருக்கின்றது. இதுவே இந்தியா போன்ற நாடுகளில் பெருந் தொற்று உலக அளவில் இரண்டாம் நிலையளவிற்கு ஏறியதற்கு காரணம்.


மரணங்கள் குறைவாகவும், தொற்றும் மிகக் குறைவாக இருந்த இலங்கையில் அண்மைய காலங்களில் சகல செய்திகளிலும் வியாபித்திருகக் கூடியதாக கொரானவின் தொற்று காணப்படுகின்றது.
வியாங்கொடை ஆடைத் தொழிற் சாலையில் துளிர் விட்டு பூத்து மரகந்தம் காற்றில் பறந்து எங்கும் செல்வது போல் இந்த தொழிற்சாலையில் வேலை செய்த இலங்கையின் பல்வேறு பாகங்களின் மக்கள் மூலம் இலங்கை முழுவதும் இது தற்போது பரவியுள்ளது.


முதல் சுற்றில் பிரதான நகரங்கள் சிறப்பாக தலi நகரைச் சார்ந்து இருந்த இந்த பரவல் இரண்டாவது சுற்றி மலையகம் வன்னி மட்டக்களப்பு ஏன் ஆதிவாசிகள் வாழும் தம்பானை வரை பரவியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.


அமெரிக்காவிற்கான ஆடை ஏற்றுமதியின் ஒரு பகுதி இந்தியாவில் இருந்து நடைபெற்று வந்தது. கொரனாவின் தாக்கம் அங்கு அதிகரித்த போது அமெரிக்கா இந்தியாவின் ஆடைகளுக்கான இறக்குமதியை தடை செய்தது. இந்த இறக்குதியை இலங்கை போன்ற நாடுகளில் இருந்து எதிர்பார்த்து அமெரிக்கா.


இதற்கு ஒத்துக் கொண்ட இலங்கை வியாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதற்கான முன்னெடுப்புகளை பெரிய அளவில் செயற்படுத்த முற்பட்டது. இததனை ஆரம்பத்திற்கு இந்திய தொழில் நுட்பமம,; உபகரணங்கள், இதனை இயக்குவதற்கான பயிற்சியாளர்கள் முகாமைத்துவ உதவிகள் என்பனவற்றை சில மணி நேர பயணத்தில் இலங்கை வந்து 14 நாட்கள் தனித்திருத்தலை தவிர்த்து செயற்படுதப்பட்டதிலேயே இந்த வியாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பெரும் தொற்று பரவியதற்கான காரணங்களாக பார்கப்படுகின்றது. இது உண்மையானால் இலங்கை அரசு செய்த மகா பெரும் தவறாக இதனைப் பார்க் வேண்டியுள்ளது.


எவை எப்படி இருப்பினும் பெரும் தொற்றிற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதற்கு பொதுப் போக்கில் குறைந்தது இரு வருடங்களாவது தேவைப்படும் பட்சத்தில் இன்னும் ஒரு வருடத்தை கடக்க வேண்டிய சூழல் என்பது மிகப் பெரிய காலகட்டம் ஆகும்.
அதுவரை உயிர்வாழுதல் அது தொற்றில் இருந்து பாதுகாத்தல் பொருளாதாரத்தை மக்களின் அடிப்படைத் தேவையான உணவுகளைப் பெறுவதற்கான வகையில் தம்மை தகவமைத்தல் என்பதற்கு நாடுகள் வேண்டி சூழலுக்கு சிறிய வளர்ந்து வரும் நாடுகள் அதிகம் கவனம் செலுத்தும் நிலையில் உள்ளன. இதற்கு வளர்ச்சியடைந்த நாடுகள் தமது வளங்களை இவர்களுக்கு கொடுத்து அவர்கள் உயிர்வாழ்வதற்கான வாய்புகளை ஏற்படுத்த வேண்டும்.