தமிழ்ச் சமூகத்தில் சாதியம்; பேசாப் பொருளை பேச நாம் துணிவோமா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையின் வடபுலத்தில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒக்டோபர் மாதம் மகத்தானதுதான். இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன்னர், ஓர் ஒக்டோபரில், வடபுலத்தில் ஓர் எழுச்சி ஏற்பட்டது. சாதியத்துக்கும் தீண்டாமைக்கும் எதிரான வெகுசன இயக்கம், 1966ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி, வடக்கில் ஏற்படுத்திய எழுச்சியே, தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமானது. அவ்வகையில் ஓக்டோபர் மாத நினைவுகள் மகத்தானவை தான்.