நாம் வாழும் காலத்தின் வரலாற்றின் முக்கியமான ஒரு பக்கம் – வெனிசுவேலா.

சிகப்பின் வாசனை நுகர்ந்தால்கூட
அழிக்கத்துடிக்கும் அமெரிக்க பயங்கரவாதத்தின்
இன்றைய க்ரூர முகம் .

இனப்பிரச்சினைக்கு ‘தீர்வைத் தருவேன்’ – மஹிந்த ராஜபக்‌ஷ

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய தீர்வைத் தன்னால் தரமுடியுமெனவும் அதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க, தமிழர் பிரதிநிதிகள் தயாராக இருக்கவேண்டுமெனவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

புலிகள் சகோதர படுகொலை புரிந்தனர் – ஆவணப்படத்தை வெளியிட்டு வைத்தார் விக்கி…

சகோதர படுகொலைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர் என ஈ.பி.ஆர்.எல்.எப். உருவாக்கியுள்ள “இயக்க வரலாறு” எனும் ஆவண படத்தினை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைத்துள்ளார்.

மன்னார் மனிதப் புதைகுழி புலிகளால் கொல்லப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்களது குடும்பங்களினதா?

மன்னார் புதை குழி பற்றி பா.உ. சுமந்திரன் அவர்கள் சர்ச்சையான கருத்து தெரிவித்திருக்கும் நேரத்தில் யாழ் இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி அந்தச் செய்தியை அப்படியே தருகிறோம் – —-ஆசிரியர்

சுதந்திரம்

(Saakaran)

பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் கிடைத்ததை நாம் கறுப்பு பட்டி காட்டி எதிர்ப்பதன் மறுவளம் பிரித்தானியாவின் அடிமைத்தனத்திற்குள் நாம் தொடர்ந்து இருப்பதை ஆதரிக்க வேண்டும் கருப் பொருளுக்குள்ளும் தள்ளிவிடும். சுதந்திரத்திற்கு பின்பு இலங்கை அரசு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஏன் ஏனைய சமூகங்களுக்கான சமத்துவமான உரிமைகளை வழங்கவில்லை வழங்காமல் இருப்பது என்பது இலங்கை அரசிற்கு எதிரான பிரச்சனை முதல் முரண்பாராக இருக்க வேண்டுமே ஒழிய பிரிதானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து எம்மை விடுவித்தல் இதனைத் தொடர்ந்த குடியரசாக இலங்கையை பிரகடன்படுத்தல் என்பதில் நாம் தமிழ்கள் என்பதற்கு அப்பால் இலங்கையர் என்ற வகையில் செயற்பட வேண்டும்.

‘கொடுத்த வாக்குறுதியை, ஜனாதிபதி மறந்தாலும் நாங்கள் கைவிடோம்’


இந்நாட்டு மக்களுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த வாக்குறுதியை அவர் மறந்து செயற்பட்டாலும் நாங்கள் அவற்றைக் கைவிடப்போவதில்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அமெரிக்கத் தளம்: நெருப்பில்லாமல் புகையுமா?

(கே. சஞ்சயன்)
அமெரிக்க கடற்படை, தற்காலிக விநியோக வசதிக்கான மய்யமாக, இலங்கையை, மீண்டும் இந்த வாரம் முதல் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில், செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்பாடு, நாட்டுக்கு ஆபத்தானது என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இலங்கையைத் தமது விநியோக தேவைக்காக, அமெரிக்க கடற்படை பயன்படுத்துவது தொடர்பான தகவல்கள், வெளிவந்திருக்கின்றன.

இந்தியாவிடம் ஏன் தோற்றது அவுஸ்திரேலியா?


(Shanmugan Murugavel)

அவுஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியாவில் வைத்து முதற்தடவையாக வென்று நேற்று முன்தினம் இந்தியா வரலாறு படைத்தது. அந்தவகையில், இப்பத்தியானது அவுஸ்திரேலியாவின் தோல்விக்கான காரணங்களையும் இந்தியாவின் வெற்றிக்கான காரணங்களையும் ஆராய்கிறது.

ஆறுமுகம் திட்டம்(A River for Jaffna)

யாழ்ப்பாண ஆற்றுத்திட்டத்தின் / ஆறுமுகம் திட்டத்தின் அறிமுகம்:

இந்த திட்டத்தின் முதற்படியாக ஆனையிறவு நீரேரியை கடல்நீருடன் கலக்கவிடாமல் தடுப்பது. இதற்கான அணை ஒன்றை பலமாக அதன் கிழக்குப்புறம் அமைக்க வேண்டும். ஆனையிறவு நீரேரியில் கலக்கும் கனகராயன் ஆற்றின் நீரை ஆனையிறவு நீரேரியில் சேமிக்கவேண்டும்.
இப்படியாக ஆனையிறவு நீரேரியை ஒரு மிகப்பெரிய நன்னீர்த்தேக்கமாக மாற்றமுடியும். இது ஓரிரு வருடங்களில் நடந்து நன்னீராக மாறும் ஆனையிறவு நீரேரியை முறையாக பராமரிக்கவேண்டும்.

உலக சமத்துவமின்மை அறிக்கை 2019: விடையில்லா வினாக்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உலகம் சமத்துவபுரமன்று. சமத்துவத்துக்கான போராட்டங்களே, உலக வரலாற்றில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. ஆனால், சமத்துவமின்மை தொடர்கிறது; அதற்கெதிரான போராட்டங்களும் தொடர்கின்றன.