அசோகமித்திரன்: ஓய்வில்லா எழுத்தியக்கம்

தமிழின் மாபெரும் எழுத்தாளர்களுள் ஒருவரான அசோகமித்திரன் கடந்த 23-03-2017 அன்று காலமானார். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் படைப்புலகில் தீவிரமாக இயங்கிவந்தவர் அசோகமித்திரன். இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்துக்கும் மேற்பட்ட குறுநாவல்கள், ஒன்பது நாவல்கள், நூற்றுக்கணக்கான கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என விரியும் படைப்புலகம் அவருடையது. 1960-களில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய அவர், தன் இறுதி மூச்சுவரையிலும் எழுத்தாளராகவே வாழ்ந்தார். எண்பது வயதுக்குப் பிறகும் அவரது எழுத்து வேகம் எல்லோரையும் பிரமிக்க வைத்தது. நம் ‘தி இந்து’ நாளிதழிலும் சமீபத்தில் அவர் எழுதிய ‘மவுனத்தின் புன்னகை’ தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

(“அசோகமித்திரன்: ஓய்வில்லா எழுத்தியக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

‘புலிகள் தொடர்பில் தகவல் இல்லை’

“1972 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் தம்மிடம் இல்லை” என, அரசாங்கம், நாடாளுமன்றில் நேற்று (23) அறிவித்தது. அத்துடன், அரசாங்கப் பாதுகாப்புத் தரப்பில் பொலிஸ் தவிர்ந்த 25ஆயிரத்து 363 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், 38ஆயிரத்து 675 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்தது.

(“‘புலிகள் தொடர்பில் தகவல் இல்லை’” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கைக்கடிகாரத்த கட்டிருக்கின்றேன் : ஜெனிவாவில் அருட்தந்தை இம்மானுவேல்

பிரபாகரனும் புலிகளும் கொலை வெறி பிடித்து, ஆயிரக்கணக்கான தமிழ், சிங்கள மற்றும் இஸ்லாமிய பொதுமக்களைக் கொலை செய்த போதும் எதுவித கண்டனமும் தெரிவிக்காமல், கிறிஸ்தவன் என்ற ரீதியிலேயே ஆதரித்தவர்தான் இந்த கடவுளுக்குள் பிரமாணிக்கமாக இருக்கும் பாதிரி. நான் ஆரம்ப காலங்களில் எமது இனதுக்காக குரல் கொடுத்ததாகவும் தற்போது எதனையும் செய்வதில்லை என கூறுவது பிழையான விடயமாகும். சம்பந்தன்விக்னேஸ்வரன் ஆகியோருக்கு முன்பாகவே தமிழர் பிரச்சினைரய சர்வதேசத்தில் பகிரங்கப்படுத்தினேன். என் மீது எந்த குற்றம் சுமத்தினாலும் நான் கடவுளுக்குள் பிரமாணிக்கமாக இருக்கின்றேன்.

(“பிரபாகரனிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கைக்கடிகாரத்த கட்டிருக்கின்றேன் : ஜெனிவாவில் அருட்தந்தை இம்மானுவேல்” தொடர்ந்து வாசிக்க…)

ஆர்.கே.நகர் யாருடைய கணக்கு ஜெயிக்கும்?

(கே.கே.மகேஷ்)

யானைக் காதில் எறும்பை விடத் துடிக்கிறது திமுக

இன்னொரு இடைத்தேர்தலுக்குத் தயாராகிவிட்டது ஜெயலலிதாவின் ஆர்.கே. நகர் தொகுதி. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு, இதை மற்றுமோர் தேர்தலாக அல்லாமல், தமிழக அரசியலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக மாற்றியிருக்கிறது. ஜெயலலிதாவின் தொகுதியில் போட்டியிட்டு வெல்வதன் மூலம், ‘நாங்களே உண்மையான அதிமுக’ என்று பறைசாற்றிக்கொள்ளும் வாய்ப்பாகவே அதிமுகவுக்கு உரிமை கோரும் மூன்று அணிகளும் கருதுகின்றன.

(“ஆர்.கே.நகர் யாருடைய கணக்கு ஜெயிக்கும்?” தொடர்ந்து வாசிக்க…)

பஞ்சாபில் ஆம் ஆத்மி தோற்றது ஏன்?

(சேகர் குப்தா)

‘தோல்வி என்பது அனாதைக் குழந்தை அதற்கு யாரும் சொந்தம் கொண்டாட மாட்டார்கள்’ என்பது முதுமொழி. பிரிட்டிஷ் பத்திரிகையாளர் மைரா மெக்டொனால்ட் இதே தலைப்பில் எழுதிய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பதால் எனக்கும் இது தோன்றியது. பஞ்சாபிலும் கோவாவிலும் ஆம் ஆத்மி கட்சி அடைந்த தோல்வியின் பின்னணியில் இதையே சிந்தித்தேன். வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்னதாகவே அந்த கட்சி வெற்றி விழா கூட கொண்டாடியது.

(“பஞ்சாபில் ஆம் ஆத்மி தோற்றது ஏன்?” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்கொட்லாந்து: பிரிந்து போதலெனும் முரண்நகை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நாட்டின் ஒருபகுதி பிரிந்து தனிநாடாவதும் அதை நிறுத்தப் போர்கள் வெடிப்பதும் அவை பேரழிவுகளாகத் தோற்றம் பெறுவதும் வரலாற்றில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்திருக்கிறது. இப்போதைய உலக ஒழுங்கு, தனிநாடுகள் உருவாவதற்கு வாய்ப்பானதாக இல்லை. இயல்பாகவே தனிநாடுகளாக உரித்துடைய பல, அவ்வாறு பிரிந்து போகாமல் பார்க்கப்பட்டுள்ள அதேவேளை, மக்களால் கோரப்படாத நிலையில் சில நாடுகள் தனிநாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை தனிநாடு என்கிற கோரிக்கையின் நியாயத்தை ஒருபுறம் கேள்விக்குட்படுத்துவதோடு, மறுபுறம் நியாயமான தனிநாட்டுக் கோரிக்கைகளை மறுதலிக்கவும் வழிசெய்கின்றன.

(“ஸ்கொட்லாந்து: பிரிந்து போதலெனும் முரண்நகை” தொடர்ந்து வாசிக்க…)

போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் உள்நாட்டு விசாரணையை முன்னெடுக்கவேண்டும்

(வரதராஜப்பெருமாள்)

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை கோருவதை காட்டிலும் உள்நாட்டு விசாரணைகளில் கவனம் செலுத்தவேண்டும் என்று வடக்கு,கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்  வரதராஜப்பெருமாள்வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டு விசாரணை ஒன்றில் பின்பற்றப்படும் முறையே சர்வதேச விசாரணை ஒன்றிலும் பின்பற்றப்படுகிறது. எனவே உள்நாட்டு விசாரணைகள் தொடர்பாக ஆராயவேண்டும் என்றும் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். முதலில் உள்நாட்டு விசாரணைகள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் சர்வதேச விசாரணை தொடர்பாக சிந்திக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை என்றக்கோரிக்கையை முன்வைப்பது, விவேகமற்ற செயல் என்றும் வரதராஜப்பெருமாள் கூறியுள்ளார்.

வடமாகாணசபையின் அலட்சியப்போக்குகள் – கருணாகரன்

கடந்த வாரம் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கனடாவிலிருந்து வந்திருந்த முதலீட்டாளர் குழுவொன்று சந்தித்திருந்தது. இந்தக் குழுவில் முதலீட்டாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 29 பேர் அடங்கியிருந்தனர். இந்தச் சந்திப்பின் நோக்கம், போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் வட பகுதியை அபிவிருத்தியடைய வைப்பதற்கான முதலீடுகளைச் செய்வதற்குரிய ஏதுநிலைகளை ஆராய்வதாகும். ஆனால், “சந்திப்பு இனிக்கவில்லை. திருப்தியளிக்கவில்லை. உரிய முறையில் இதற்கான பதில்கள் கிடைக்கவில்லை. சரியான அக்கறை காட்டப்படவில்லை. சி.வி.விக்னேஸ்வரனிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே எழுத்தில் தெரியப்படுத்தியிருந்த போதிலும் அவரிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் கிட்டவில்லை என்று முதலீட்டாளர்கள் குழு கவலை தெரிவித்திருக்கிறது.

(“வடமாகாணசபையின் அலட்சியப்போக்குகள் – கருணாகரன்” தொடர்ந்து வாசிக்க…)

LTTE atrocities also have to be investigated

(BY Mirudhula Thambiah)
Former Chief Minister of the merged North-East A. Varatharaja Perumal said, there is much to investigated on LTTE atrocities and disappearances committed by them, they also have to be inquired into. But these issues are not on the agenda in any place. Only the last part of the war is on the agenda of the UNHRC in Geneva.
“Geneva has nothing to do with the political solution. It is in relation to the past and not with the future. Therefore, the section that is interested in the past, only wants to involve the latter part of the war. If it is considered from the beginning, there is so much to inquire about the LTTE as well,” he added.

(“LTTE atrocities also have to be investigated” தொடர்ந்து வாசிக்க…)

தனி நாடு பாதையை நோக்கி நகர்கிறதா ஸ்காட்லாந்து?

பிரிட்டனிலிருந்து பிரிந்து ஸ்காட்லாந்து தனி நாடாவது தொடர்பாக இரண்டாவது முறை பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியிருக்கிறார், ஸ்காட்லாந்தின் முதன்மை அமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன். இந்தக் கோரிக்கையை அவர் வெளியிட்ட அதே சமயத்தில்தான், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நிகோலா ஸ்டர்ஜனின் இந்தக் கோரிக்கை, பிரிட்டனிலிருந்து வெளியேற வேண்டும் எனும் கனவு, ஸ்காட்லாந்து மக்களிடம் இருந்து முற்றிலுமாக அகன்றுவிடவில்லை என்பதை பிரிட்டன் அரசுக்குச் சுட்டிக்காட்டுகிறது எனலாம். ஆனால், இது காலப் பொருத்தமிக்க கோரிக்கையா என்பது தெரியவில்லை.

(“தனி நாடு பாதையை நோக்கி நகர்கிறதா ஸ்காட்லாந்து?” தொடர்ந்து வாசிக்க…)