உறுதி… உறுதி… உறுதி… How many times “உறுதி…?”

 

பொது மன்னிப்பின் கீழ் விடுதலை அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தமிழ்க் கைதிகள் சிறைச்சாலைகளுக்குள் கடந்த வருடம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது, அரசு தலைவர்களுடன் பேச்சுக்கள் நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன், சிறைக் கைதிகளிடம் நேரடியாக உறுதியளித்திருந்தார்…

(“உறுதி… உறுதி… உறுதி… How many times “உறுதி…?”” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையில் புலிகள் பலமாக இருந்து போராடியபோது……

அவர்களை இன்னும் இன்னும் உசுப்பேத்தி விடடவர்களும் ,,புகழ்ந்து அவர்களை பலிக்கடா ஆகியவர்களும்….

இன்று புலம்பெயர் தேசங்களிலும் ,,இலங்கையிலும் இருந்து கொண்டு ????

புலிகள் செய்தது அது பிழை ,,,இது பிழை என்று டிவி நிகழ்ச்சிகளும் ,,பத்திரிகையியிலும் விளாசி தள்ளுகிறார்கள்….

அரசியல்வாதிகள் மாறி மாறி !!!!!

புலிகளை விமர்ச்சிப்பதும் பின்பு தியாகிகள் என்று சொல்வதும் தொடருகிறது…..

(“இலங்கையில் புலிகள் பலமாக இருந்து போராடியபோது……” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண அமைச்சர்களுக்கு பாரிய நெருக்கடி

வடமாகாண சபை அமைச்சர்களுக்கு எதிராக, பொதுமக்களால் பல குற்றச்சாட்டுகள், முதலமைச்சரிடம் ஆதாரங்களுடன் கையளிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, குறித்த அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு, இளைப்பாறிய நீதிபதிகளைக்கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், மாகாண சபை அமர்வில் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். பொது நூலகக் கேட்போர்கூடத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின்; ஐந்தாவது கூட்டத் தொடரின் பின்னர், ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

(“வடமாகாண அமைச்சர்களுக்கு பாரிய நெருக்கடி” தொடர்ந்து வாசிக்க…)

இணைப்பு விவகாரம் வடக்கிலும் கிழக்கிலும் ஏட்டிக்குப் போட்டி

வடக்கிலும் கிழக்கிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இரண்டு முக்கியமான கூட்டங்களில், வடக்கு கிழக்கை இணைப்பது தொடர்பிலான யோசனைக்கு, ஏட்டிக்குப் போட்டியான வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர், யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது. இதேவேளை, கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் மாநாடும், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அஸாத்பிளாசா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

(“இணைப்பு விவகாரம் வடக்கிலும் கிழக்கிலும் ஏட்டிக்குப் போட்டி” தொடர்ந்து வாசிக்க…)

சிங்களவர்களிற்கு எதிராக போர் தொடுக்கும் நிலை ஏற்படும் – அனந்தி எச்சரிக்கை.

இதை எல்லாம் அரசியல் அரங்குக்குக் கொண்டு வந்தவர்களும் பைத்தியக்காரர்கள் தான்.  தமிழர் விடுதலை போராட்டம் தொடர்பில்இதவறான எண்ணப்பாட்டில் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். குறிப்பாகஇ விடுதலைப் போராட்டம் குறித்து சிங்களவர்களால் எழுதப்பட்ட சில புத்தகங்களை தமிழுக்கு மொழிபெயர்த்தால் அவர்கள் மீது போர் தொடுக்கும் நிலை ஏற்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

(“சிங்களவர்களிற்கு எதிராக போர் தொடுக்கும் நிலை ஏற்படும் – அனந்தி எச்சரிக்கை.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் அரசியல் கைதிகள், இன்று உண்ணாவிரதத்தில் குதித்தனர்

எவ்விதமான விசாரணைகளும் இன்றி, சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், இன்று திங்கட்கிழமை(08), அடையாள உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு கையளிக்குமாறு கடிதமொன்றையும் கடந்த சனிக்கிழமையன்று அனுப்பிவைத்துள்ளனர்.

(“தமிழ் அரசியல் கைதிகள், இன்று உண்ணாவிரதத்தில் குதித்தனர்” தொடர்ந்து வாசிக்க…)

இராணுவ , புலி இரட்டை முகவராக இருந்த புளொட் உறுப்பினர் சிவராம்

இராணுவத்திற்கு புலிக்குள் ஊடுருவி தகவல் திரட்டும் முகவாராகவும் புலிகளுக்கு இராணுவத்தினருக்குள் ஊடுருவி தகவல் திரட்டும் முகவராகவும் இருந்து செயற்பட்டு வந்தவர் சிவராம். இதனால் புலிகளிடத்தில் மாமனிதர் பட்டமும் பெற்றவர் சிவராம். நான் கொல்லபட்டால் எனது நினைவாக கிழக்கு மாகாணத்தில் இருக்கும் 90 ஆயிரம் விதவை தமிழ் பெண்களுக்கு ஏதாவது உதவிகளை புலம்பெயர் நாடுகளிடம் இருந்து எடுத்து செய்யுங்கள் என்று தனது நோர்வே நண்பன்-க்கு தெரிவித்து சில தினங்களில் சிவராம் கொல்லபட்டார். இந்த தொலைபேசி ஒலிபதிவு சிவராமின் குரலில் இண்றும் உண்டு.

(“இராணுவ , புலி இரட்டை முகவராக இருந்த புளொட் உறுப்பினர் சிவராம்” தொடர்ந்து வாசிக்க…)

ஜெயமோகன் இந்து பேரினவாத கொள்கையை பின்பற்றுபவர்

“இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை” என்று எழுத்தாளர் ஜெயமோகன் கருத்து தெரிவித்துள்ளமை குறித்து பலர் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். எழுத்தாளர் சயந்தன் கூறியது மாதிரி இதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவுமில்லை. சிலநேரம் ஜெயமோகன் “இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான்” என்று சொல்லியிருந்தால் மட்டும் தான், அந்தக் கூற்றின் உள்நோக்கம் குறித்து சந்தேகப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அது அவரது அரசியல் கொள்கைக்கு முரணானது.

(“ஜெயமோகன் இந்து பேரினவாத கொள்கையை பின்பற்றுபவர்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை ‘இனப்படுகொலை’ பற்றி…

அன்புள்ள ஜெயமோகன்,

நலம்தானே? தடம் இதழில் உங்களது பேட்டி படித்தேன். அது பற்றிய எனது கருத்தை பகிர்ந்துகொள்ள எழுதுகிறேன்.இந்த பேட்டி இலக்கியத்தைவிடவும் உங்களை சுற்றியுள்ள சர்ச்சைகளை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு சோட்டா கவர்மெண்ட்க்காக ஒருவன் நாவல் எழுதுவானா என்ற வரிகளை ரசித்தேன்.

(“இலங்கை ‘இனப்படுகொலை’ பற்றி…” தொடர்ந்து வாசிக்க…)

‘நம்பிக்கையுடன் கல்வி நடவடிக்கைகளுக்கு மீண்டும் வருகை தாருங்கள்’

யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சகல தரப்பையும் உள்ளடக்கிய வகையில் வியாழக்கிழமை (04) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பெறுபேறாக உள்ளக மாணவர்களுக்கான சகல விதமான பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளபடியால், பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் வருகை தருமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சின் செயலாளர் ஜகத் விஜேவீர எல்லா மாணவர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

(“‘நம்பிக்கையுடன் கல்வி நடவடிக்கைகளுக்கு மீண்டும் வருகை தாருங்கள்’” தொடர்ந்து வாசிக்க…)