தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் -மந்துவில்( பகுதி 9)

சாதி வெறியர்கள் ஊருக்குள் புகுந்து நடத்த இருந்த திட்டம் தோற்றது.ஆனால் எமது பகுதி இளைஞர்கள் அதே வழியை சிந்திக்க தொடங்கினர்.இதே வேளை இதற்கு தலைமை தாங்கும் எதிரிகளை கொல்லும் முடிவுக்கு வந்தனர்.இது தொடர்பாக இரத்தினத்திடம் கேட்க அவர் மறுத்துவிட்டார்.அப்படி செய்வதாயின் ஒரே நாளில் சத்தமின்றி அவர்களை அழிக்கலாம்.நமது நோக்கம் அதுவல்ல.அவரகளை நம் கண் முன்னே பணிய வைக்க வேண்டும்.

(“தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் -மந்துவில்( பகுதி 9)” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண சபையில் கடும் வாய்த்தர்க்கம்! கருத்து மோதல்!

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களால் மாகண சபையின் 45ம் அமர்வில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தீர்மானம் தொடர்பான விவாதம் இன்றைய தினம் நடைபெற்ற மாகாண சபையின் 46வது அமர்விலும் தொடர்ந்தது. ஆளுங்கட்சியினருக்கிடையில் சுமார் 2 மணி நேரம் கடுமையான வாய்த்தர்க்கம் மூண்டதுடன், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஒரு பகுதியினர் முதலமைச்சர், அமைச்சருக்கு எதிராகவும், மற்றொரு பகுதியினர் முதலமைச்சர், அமைச்சருக்கு சார்பாகவும் நின்று ஒருவர் மீது ஒருவர் கடுமையான கருத்துக்களை முன்வைத்து மோதிக்கொண்ட நிலையில், 2 மணி நேரத்தின் பின்னர் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறிய கருத்தையடுத்து வாய்த்தர்க்கம் ஒருவாறாக முடிந்தது.

(“வடமாகாண சபையில் கடும் வாய்த்தர்க்கம்! கருத்து மோதல்!” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியாவின் காலனித்துவ நாடாகும் சிறிலங்கா?!

கலிங்கப் பேரரசின் காலத்தைப் போன்று, மீண்டும் இந்தியாவின் காலனித்துவ நாடாக சிறிலங்கா மாறும் சூழல் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “கலிங்க பேரரசின் காலத்தைப் போன்று மீண்டும் இந்தியாவின் காலனித்துவ நாடாக சிறிலங்கா மாறும் சூழல் தோன்றியுள்ளது. அனுமார் பாலம் தொடக்கம் சீபா ஊடாக இந்திய அம்புலன்ஸ் சேவை வரை பல்வேறுபட்ட சிகப்பு சமிக்ஞைகள் ஒளிர்ந்த வண்ணம் உள்ளன. இந்தியாவினால் நியமிக்கப்பட்ட ஆளுநரைப் போன்று எமது நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனவினதும், முதலமைச்சரைப் போன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின தும் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

(“இந்தியாவின் காலனித்துவ நாடாகும் சிறிலங்கா?!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பௌத்தர்கள்? தமிழ் பௌத்த பிக்குகள்?

சிறிலங்காவில் தற்போது, 22,254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ் பௌத்த பிக்குகளும் இருப்பதாக, நாடாளுமன்றத்தில் நேற்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவின் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் கயந்த கருணாதிலக பதிலளித்த போதே இந்த தகவல்களை வெளியிட்டார். தமிழ் பௌத்தர்கள் பற்றிய கணக்கெடுப்பை புத்தசாசன அமைச்சு மேற்கொள்ளாவிடினும், 2012ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் மூலம், நாட்டில் , 22,254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ் பௌத்த பிக்குகளும் இருப்பதாக, தெரியவந்துள்ளது. இவர்களில் 470 தமிழ் பௌத்தர்கள் வடக்கில் வாழ்கின்றனர். சிறிநந்தராம என்ற பெயரில் தமிழ் தம்ம பாடசாலை ஒன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதில் 80 சிறுவர்கள் கல்வி கற்றனர். தற்போது அது செயலிழந்துள்ளது. தம்ம கல்வியை மீண்டும் வழங்குவதற்கு பொருத்தமான நிலத்தை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்

அரசியல் தீர்வு முயற்சிகளை குழப்பக் கூடாது! – இரா.சம்பந்தன்

புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணிகளை யாரும் குழப்புவதோ அல்லது காலதாமதப்படுத்துவதோ கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கோரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது குறித்த பிரேரணை மீது நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போது, ஆளும்கட்சிக்கும் ஜேவிபி உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிடுகையில், “1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை கைவிடவேண்டுமென அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்காக நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்ற வேண்டும் என்ற வகையில் நாட்டின் நன்மை கருதி அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். அதில் குழப்பங்களை ஏற்படுத்தாது, தற்போது ஏற்பட்டுள்ள தக்க தருணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

வாசு­தேவ நாண­யக்­கார எதிர்ப்பு!

புதிய அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் பிர­த­ம­ருக்கு நிறை­வேற்று அதி­காரம் செல் ­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதற்கு இச்­ச­பையில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலம் கிடைக்­கா­தென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்­று­வது குறித்த பிரே­ரணை மீதான விவா­தத்தில் நேற்று புதன்­கி­ழமை கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதா? தற்­போது காணப்­படும் அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை மேற்­கொள்­வதா? என்­பது தொடர்பில் வேறு­பட்ட கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியும் தற்­போது காணப்­படும் அர­சி­ய­ல­மைப்பில் சில மாற்­றங்­களை மேற்­கொள்­வ­தற்கே இணக்­கப்­பா­டு­களை எட்­டி­யி­ருந்­தன.

(“வாசு­தேவ நாண­யக்­கார எதிர்ப்பு!” தொடர்ந்து வாசிக்க…)

யோஷித்த மீண்டும் சிறைக்குள்!

CSN தொலைக்காட்சி பாரிய நிதி மோசடியில் கைதாகி விளக்கமறியலில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியலும் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரையிலும் கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றைய வழக்கின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது

அமைச்சரானார் சரத் பொன்சேகா!

பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பதவியேற்றுள்ளார். இன்று பிற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், அவர் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றதாக, அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஊவா, மத்திய, சபரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களின் மாநகரச அபிவிருத்தி அமைச்சராக சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என முன்னதாக ஊடகங்களில் ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் காலமான காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் வெற்றிடத்திற்காக சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக கடந்த 9ம் திகதி நியமிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் அமைச்சரவை அந்தஸ்துடைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.

இரு யாழ் சட்டத்தரணிகள் மீது விசனம்!

ஹரிஸ்ணவி எனும் பதின்ம வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொடூரமாகக் கொல்லப்பட்டார். இவ்வாறான கொலைகள் இனிமேலும் நடக்க கூடாது என்பதுடன் காமக் கொடூரர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதற்காக குடாநாடு உட்பட வடபகுதி எங்கும் நேற்று ஹர்த்தால் நடாத்தப்பட்டது. அனைத்துத் தரப்பினரும் ஹர்த்தாலுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர். யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணிகளும் இதில் பங்கு கொண்டு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் பிரபலமான கிரிமினல் வழக்குகளில் ஆஜராகின்ற இரு சட்டத்தரணிகள் மிகக் கேவலமான செயலை நேற்றுச் செய்து முடித்துள்ளனர். சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று இரு வழக்குகளுக்கு ஆஜராகி வட பகுதி மக்களின் உணர்வுகளை கேள்விக்குறியாக்கி உள்ளனர் யாழ்ப்பாணத்தில் உள்ள இரு கிரிமினல் சட்டத்தரணிகள்.

(“இரு யாழ் சட்டத்தரணிகள் மீது விசனம்!” தொடர்ந்து வாசிக்க…)

உடைக்கிறது தேங்காயவா? இல்லை மகிந்தவயா?

பாவியள் எப்பிடி இருந்த மனுசனை இப்பிடி ஆக்கிப்போட்டு திரும்பவும் விடுறாங்கள் இல்லை. சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை எண்டுற மாதிரி மகிந்தருக்கு சில வலக்கையள்.அதுகள் மகிந்தருக்கு தேங்காய் உடைச்சு ஆட்சி பிடிச்சு குடுக்கப் போகினமாம். என்னவொரு அறிவு. சும்மா சொல்லப்படாது. மகிந்தரைச் சுத்தி அப்பிடி அறிவான கூட்டம். கூட்டம் எண்டால் இரண்டு மூண்டு பேர்தான். ஆனால் பெரிய கூட்டம் மாதிரி சவுண்டு கேக்கும். ஆரால் கேடு, வாயால் கேடு எண்டுற மாதிரி. ஆட்சியை கவிழ்க்க சிங்கப்பூரிலை தேங்காய் உடைக்கப் போறம் எண்டுறினம். உடையுங்கோ! உடையுங்கோ! ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி எண்டுற கதைதான் மகிந்தருக்கு.

(“உடைக்கிறது தேங்காயவா? இல்லை மகிந்தவயா?” தொடர்ந்து வாசிக்க…)