பெரும்பாலான மக்கள் இனவாதிகள் அல்ல

சாதாரணமான தமிழ் மக்களும், சிங்கள மக்களும் தாங்கள் இனவாதிகள் அல்ல என்பதை அடிக்கடி நிரூபித்துள்ளனர். ஒட்டுமொத்த சமூகத்தையும் இனவெறியூட்டும் இனவாதிகளின் முகத்தில் கரி பூசியுள்ளனர். சிங்களவர்கள் மத்தியில் மட்டுமல்ல, தமிழர்கள் மத்தியிலும் இனவாதிகள் தமது அரசியல் நலன்களுக்காக ஆடும் நாடகங்கள் எடுபடுவதில்லை.

யாழ்ப்பாணம், சங்கத்தானை பகுதியில் நடந்த விபத்தில் தென்னிலங்கையில் இருந்து வந்த சிங்கள உல்லாசப் பிரயாணிகள் பதினோரு பேர் கொல்லப் பட்டனர். விபத்துக்கு வருத்தம் தெரிவிக்கும் துண்டுப் பிரசுரம் வெளியிட்டு, மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப் பட்டது.

யாழ்ப்பாணத்தில் விபத்துக்கள் அடிக்கடி நடப்பதுண்டு. விபத்தில் மரணம் சம்பவிப்பதுண்டு. பஸ் வண்டி மோதி இறந்தவர் தமிழராகவும், சாரதி சிங்களவராகவும் இருந்தால், அதைக் குறிப்பிட்டு அரசியல் நடத்தியோர் உண்டு. யாழ் நகரில் வெளியாகும் உதயன் பத்திரிகை கூட இனவாதத்தை தூண்டும் வகையில் செய்தி வெளியிடுவதுண்டு. ஆனால், பெரும்பாலான தமிழ் மக்கள் இனவாதிகளின் அரசியலுக்கு பலியாகவில்லை.

(Kalai Marx)