தற்கொலையால் பிறரை கொல்லும் பயங்கரவாதிகள்

(Annesley Ratnasingham)
!!..தற்கொலைதாரிகளை எந்த ஒரு திட்டத்தாலும் நிறுத்தமுடியாது ஆனால் அவர்கள் சார்ந்த சமூகம் அதை முற்றாக வெளிப்படையாக நிராகரிக்கும்போது மட்டுமே அதை நிறுத்தலாம் ..
.
….தற்கொலைதாரிகளின் நடவடிக்கையால் அந்த சமூகத்துக்கு எந்த நன்மையையும் இல்லை , அந்த மதத்துக்கும் எந்த நன்மையையும் இல்லை என்பதை வெளிகாடட அந்த சமூகமே தெருவில் முழுமையாக இறங்கி போராடவேண்டும் …
.
……கடந்த உயிர்த்தநாள் மத அடிபடைகொண்ட பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் தமது அடையாளத்தை ஒழித்து அதை செய்யவில்லை ..!!
.
…………..அடுத்தது இவர்கள் நடத்திய தற்கொலை தாக்குதல்கள் ..தற்கொலை தாக்குதல்கள் இல்லாமேலேயே இதை செய்திருக்க முடியும் ….
…………………அப்போது எதற்கு அதை தற்கொலை தாக்குதலாக செய்தார்கள் என்ற கேள்வியை கேட்க்கும்போது பதில் கிடைக்கும் …
.
…அதாவது அவர்கள் ஒரு ராணுவ அணியையோ அல்லது ஒரு பாதுகாப்பு தர்ப்பையோ தற்கொலை தாக்குதல் செய்யவில்லை …
.
…………………ஒரு ராணுவ பாதுகாப்பு அரணுக்குள் நுழைவது கடினம் அதனால் அதை தற்கொலை தாக்குதலாக செய்யலாம் …
.
…ஆனால் இங்கு சாதாரண இடங்களில் தமது பொதியை கொண்டு சென்று அதை மேசைக்கு அடியில் தள்ளி விட்டு வெளியேறி இருக்கலாம் அல்லவா ???
.
….ஆகவே அவர்கள் அவர்களுடைய மக்களுக்கு இந்த செய்கையின்மூலம் வெளிப்படுத்தும் கருத்து அவர்களுடைய மதத்தில் சொல்லப்படவிடயங்களை நம்பிக்கை ஏற்படுத்துவதற்கே …
.
…ஆகவே அந்த மதத்தை சார்ந்த மக்கள் ஒட்டுமொத்தமாக இவர்களை நிராகரிக்கும்போது அவர்கள் செய்யும் தற்கொலைகளுக்கு அர்த்தம் இல்லாமல் போதும் …
.
..ஆனால் அநேகர் அவர்களை முற்றாக நிராகரிப்பதாக இல்லை …( வெளிப்படையாக )
.
..அதன் காரணமும் மதமே …

‘சஹ்ரான் உயிர் வாழ்கிறார்’ என்ற கதையின் பின்புலம்

(இலட்சுமணன்)

சஹ்ரான் நாட்டைவிட்டுச் சென்றுவிட்டார் என்று ஒரு கதை, இப்போது வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அவர் தற்கொலைத் தாக்குதலில் இறந்துவிட்டார் என்று, கடந்த வாரம் வரை சொல்லிக் கொண்டிருந்த பாதுகாப்புத் தரப்பு, திடீரென்று இந்தக் கதையைச் சொல்லத் தொடங்கியிருக்கிறது.

‘இன்னும் 50பேர் உள்ளனர்’

தற்கொலைக் குண்டுதாக்குதல்களை மேற்கொள்ள இன்னும் 50பேர் தயாராகியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதென பொதுபலசேனா தெரிவித்துள்ளது. எனவே இந்த விடயத்தை எளிதாக எண்ணாமல் பாதுகாப்புத்துறை மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் பொதுபலசேனா குறிப்பிட்டுள்ளது.

கோவிலில் வெடிபொருள்கள் மீட்பு

யாழ்ப்பாணம் – தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மற்றும் வயர் சுற்று என்பன மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் பொலிஸாரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டுள்ளன. 9 மில்லி மகசின் ஒன்று, 5 தோட்டக்கள் மற்றும் வயர் சுற்று ஒன்று என்பனவே தாவடி பத்திரகாளி கோவில் வளாகத்தில் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

‘மேற்குலகை நம்பி ஏமாற வேண்டாம்’

மதங்களுக்கிடையே மோதல்கள் இடம்பெறுவதற்கு வழிசமைக்காது, அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டுமென, அமரபுர நிக்காயவின் மஹாநாயக்க தேரர் அதி வணக்கத்துக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரர் வலியுறுத்தினார். கொழும்பில் இன்று (10) நடத்தப்பட்ட சர்வமதத் தலைவர்களின் ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தோப்பில் மாமாவுக்கு அஞ்சலி .

(அ. ராமசாமி)

சென்னை நோக்கிப் போகும் இந்தப் பயணம் வருத்தம் கூடியதாகிவிட்டது. நெல்லையில் இருந்திருக்க வேண்டும். 1991-92 ஆக இருக்கும். கி.ரா.வைப் பார்க்கப் புதுவை வந்திருந்தார். சந்தித்த அன்று முதல் எனக்கு மாமா தான். கி.ரா. பெரிய மாமா ஆனதால், நான் சின்னமாமா ஆகிவிட்டேன். அப்படித் தான் அழைப்பார். அவர் மேடையில் பேசுவதைக் கேட்பதைவிட தொலைபேசியில் பேசுவதை விரும்பிக் கேட்பேன். நீண்ட நேரம் பேசுவோம். இந்த ஆண்டு சாகித்ய அகாதமியின் கடைசிக்கட்ட முடிவு எடுக்கப்பட்ட விதத்தை விரிவாகச் சொன்னார். எஸ்.ரா.வுக்குக் கிடைக்கக் காரணமான குழுவில் இருந்த மகிழ்ச்சி வெளிப்பட்டது. சிரிப்பு,பேச்சு என நீண்ட உரையாடல் அது.

எமது குழந்தைகளின் எதிர்காலம்: வளமா, வங்குரோத்தா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
குழந்தைகளின் எதிர்காலம் முற்றிலும் அவர்களின் கைகளில் இல்லை; அவர்களின் பெற்றோரின் கைகளிலும் இல்லை; அவர்கள் வாழும் சமூகத்திடமும் இல்லை. மாறாக, உலகத்தின் ஒவ்வோர் மூலையில் இடம்பெறும் சம்பவங்கள்தான், அவர்களின் வாழ்வில் தாக்கம் செலுத்துமாறு, உலகமும் உலக அரசியலும் மாறிவிட்டன.

NTJ அமைப்புடன் நேரடி தொடர்புடைய 8 பேர் கைது

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் நேரடி தொடர்புடையவர்களெனக் கருதப்படும் 8 பேரை குருநாகலில் வைத்து கைது செய்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேலும் 108 பேரை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, குறித்த நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். ராஜகிரிய – நாவல வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரின் கசட்டுகள் சிலவற்றுடன் மௌலவியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 14 கசட்டுகளளும், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் புகைப்படங்கள் மற்றும் அலைபேசியும் மீட்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிசபாரட்ணம் அவர்களின் மரணம் 33 ஆண்டுகளுக்குமுன் சொல்லிச் சென்றசெய்தி

(தோழர் சுகு (சிறிதரன் ))

இன்றையநாட்களில் அவரது வாழ்வும் மரணமும் முக்கியத்துவம்.
33 ஆண்டுகள் காலவெள்ளம் அடித்துக் கொண்டுபோகிறது. சகோதரப்படுகொலை என்பது எத்தனை விபரீதங்களை எவ்வளவு பெரிய வெற்றிடத்தை சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. போராட எனப் புறப்பட்டவர்களை அழித்தொழிக்கும் விபரிதம் சமூகத்தை எங்குகொண்டு போய் சேர்க்கும் என்பதை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.