மக்களோடு மக்களாய்…

நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் க.சற்குணநாதன்(பேராசிரியர் சிவச்சந்திரனின் மைத்துனர்) அவர்கள் எழுதிய “ஆழ்கடலும் அழகிய முகங்களும்” என்ற புத்தக வெளியீடு 07.04.2019அன்று நடைபெற்றது. இவ் புத்தக வெளியீட்டில் தலைமையுரையை வராஜப்பெருமாள் அவர்களும், ஆய்வுரையை சர்வேஸ்வரன்( சுகி)அவர்களும் , கருத்துரையை சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களும் வழங்கினார்கள் .
இறுதியாக இந் நிகழ்வுக்கு வருகைதந்த அனைவருக்கும் வரதராஜப்பெருமாள் அவர்கள் புத்தகங்களை வழங்கினார்.

மக்களோடு மக்களாய் தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர்

விடியல் சமூகசேவைகள் சங்கத்தின் ஆறு வருட பூர்த்தியினை நினைவுகூரும் நோக்கில், ஏழ்மையான குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தது.

தோழர் ஐயா அவர்களின் 31வது ஆண்டு நினைவுநாள்……..

06.04.1988 அன்று தோழர் ஐயா அவர்களுடன் தோழர்கள் சாரங்கன், தங்கேஸ், ரவி, சில்வா, பவா ஆகியோர் நிராயுதபாணிகளாக வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது வவுனியாவில் வைத்து சகோதர அமைப்பான PLOTE அமைப்பின் உறுப்பினர்களால் வழிமறிக்கப்பட்டு படுகொலை செய்து தெருவேரத்தில் வீசி எறியப்பட்டார்கள்.

‘தேர்தலுக்குப் பிறகு மாயாவதியுடன் காங்கிரஸ் கூட்டணி’

இந்திய நாடாளுமன்ற கீழ்ச்சபைக்கான தேர்தலுக்குப் பிறகு மாயாவதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு அண்மையில் அளித்த செவ்வியொன்றிலேயே மேற்படி விடயத்தை ப. சிதம்பரம் வெளிப்படுத்தியுள்ளார்.

‘காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் கவலையளிக்கிறது’

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ளது. எனினும், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இதுவரையில், தீர்வு வழங்கப்படாமை கவலையளிக்கிறதென உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

3 நாடுகளிலிருந்து இலங்கைக்கு மின்சாரம்

மின்சாரத்தை சீராக வழங்குவதற்காக, 3 நாடுகளிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. பிரித்தானியா, டுபாய், ஹொங்கொங் ஆகிய நாடுகளிலிருந்து மேலதிக மின்சாரத்தை 6 மாதத்துக்கு ​கொள்வனவு செய்வதற்கே அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

சிதறும் முஸ்லிம் வாக்குகள்: சாதுர்ய வாக்களிப்பு கைகொடுக்குமா?

(ஆர்.ஷபிமுன்னா)

பல்வேறு புள்ளிவிவரங்களின் சராசரிக் கணிப்பின்படி நாடு முழுவதிலும் தற்போது முஸ்லிம்கள் சுமார் 20% உள்ளனர். இவர்களது வாக்குகள் 145 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. இவற்றில் உத்திர பிரதேசத்தில் 28 தொகுதிகளும், வங்கத்தில் 20, கேரளத்தில் 6, ஜம்மு-காஷ்மீரில் 5, அசாம் மற்றும் பிஹாரில் தலா 4, ஆந்திராவில் 2, லட்சத்தீவுகளில் ஒரு தொகுதியும் முஸ்லிம்களின் வாக்குகளால் முடிவெடுக்கப்படுபவை.

ஐக்கிய அமெரிக்காவால் பயங்கரவாதக் குழுவாக புரட்சிகர காவலர்கள்


ஈரானின் உயர் புரட்சிகர காவலர் படைகளை வெளிநாட்டு பயங்கரவாதக் குழுவொன்றாக ஐக்கிய அமெரிக்கா அடையாளப்படுத்துவதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

‘உள்நாட்டில் உழாத மாடு ஜெனீவாவிலும் உழாது’

வடக்கில் ஒரு முகத்துடனும் தெற்கில் மற்றுமொரு முகத்துடனும் இரட்டை முகங்களைக்கொண்ட அரசியல் செயற்பாடுகளால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, “இங்கே உழாத மாடு ஜெனீவாவில் உழாது” என்றார்.

அமெரிக்க குடியுரிமை விவகாரம்; உறுதிப்படுத்தியது எதிர்க்கட்சி

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க குடியுரிமை நீக்கிக்கொள்வதற்கான ஆவணங்களை அமெரிக்காவிடம் சமர்ப்பித்திருப்பதை எதிர்க்கட்சி உறுதி செய்துள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று(​09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துகள் மேற்கண்ட விடயத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.