‘அடேய் பாவிங்களா!’

 

தமிழ்நாட்டில் மூளைச் சாவுக்கு உள்ளான நபர்களிடமிருந்து உறுப்புகளை தானம் பெற்று, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

(“‘அடேய் பாவிங்களா!’” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு – கிழக்கு தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி சமூக அரசியற் தலைவர்கள் அக்கறை செலுத்த வேண்டும்

தமிழ் இளைஞர்கள் போதைப் பொருட்களைப் பாவிக்கிறார்கள் – வாள்வெட்டு குழுக்களாக செயற்படுகிறார்கள் – அவர்கள் உடலுழைப்புக்குத் தயாராக இல்லை என பலவாறாக தமிழர் சமூக அரசியற் தலைவர்களும் தமிழ் ஊடகங்களும் அடிக்கடி குற்றம் சாட்டுவதைக் காண்கிறோம். மேலும் தமிழ் பட்டதாரி இளைஞர்கள் அரசாங்க உத்தியோகங்களைத் தவிர வேறெதற்கும் தயாராக இல்லை – இங்கு தனியார் துறைகளில் பல்வேறு வேலை வாய்ப்புகள் இருந்தும் தமிழர்கள் ஒழுங்காகவும் ஈடுபாட்டுடனும் வேலை செய்வதற்கு மிகக் குறைவானவர்களே தயாராக உள்ளனர். கட்டிடத் தொழில், மரவேலைகள், மின்சார இணைப்பு வேலைகள், உலோக வேலைகள், போன்றவற்றில் திறன் வாய்ந்த உழைப்பாளர்களை தமிழர்கள் மத்தியிலிருந்து பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது என அபிப்பிராயங்கள்; இங்கு பரவலாக உள்ளன. விவசாயக் கூலி அதிகமாக உள்ள அதேவேளை விவசாய வேலைகளுக்கான கூலித் தொழிலாளர்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது, அப்படித்தான் கிடைத்தாலும் அவர்களை முழு நேரமும் கவனிக்காவிட்டால் அவர்களிடமிருந்து உரிய அளவு வேலைகளைப் பெற முடியாதுள்ளது என விவசாயத் துறையில் உள்ளவர்கள் குறைப்பட்டுக் கொள்வதையும், உணவுக் கடைகள், பல சரக்குக் கடைகள், புடவைக் கடைகள் என பல்வேறு வர்த்தக நிலையங்களிலும் வேலை செய்வதற்கு ஊழியர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளதாகவும் அப்படிக் கிடைத்தாலும் அவர்கள் சில நாட்களுக்குள்ளேயே வேலையை விட்டு ஓடி விடுகிறரகள் என வௌ;வேறு வர்த்தகர்கள் குறை சொல்வதையும் தமிழர் சமூகத்தில் அடிக்கடி கேட்கக் கூடியதாக உள்ளது.

(“வடக்கு – கிழக்கு தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி சமூக அரசியற் தலைவர்கள் அக்கறை செலுத்த வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

ஜப்பானைத் தனிமைப்படுத்தும் சிங்கப்பூர் சந்திப்பு

(ஜனகன் முத்துக்குமார்)

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான அண்மைக்காலத்து சமாதான இணக்கப்பாடுகளைத் தொடர்ந்து, வடகொரியத் தலைவருக்கும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறவிருக்கும் நிலையில், குறித்த இரண்டு விடயங்களிலும் தனது பங்கு இல்லாமல் போனமை குறித்து, ஜப்பான் கவலை தெரிவித்துள்ளமை, சர்வதேச விவகாரங்களில் மிகவும் உன்னிப்பாகப் பார்க்கப்பட வேண்டியதாகவும்.

(“ஜப்பானைத் தனிமைப்படுத்தும் சிங்கப்பூர் சந்திப்பு” தொடர்ந்து வாசிக்க…)

மாமனிதன் …தமிழ்மக்கள் கொடுத்த பட்டம் ….!!!!

!!!..சிவில் பாதுகாப்பு திணைக்கள முன்னால் போராளி ஒருவரின் முகநூலிருந்து கண்ணீர் சிந்தியதுக்கான காரணத்தை இவ்வாறு பதிவிட்டிருந்தார்.
.
.
சிவில் பாதுகாப்பு திணைக்கள இணைந்த கட்டளை அதிகாரி W.W Rathnapriya Bandu அவர்களை #தமிழ் #மக்கள் #கண்ணீரோடுவழியனுப்ப காரணம் என்ன…
(“மாமனிதன் …தமிழ்மக்கள் கொடுத்த பட்டம் ….!!!!” தொடர்ந்து வாசிக்க…)

சாத்தான் வேதம் ஓதுகிறது..!

கனடா ஒன்ராறியோ பாராளுமன்றத்திற்குத் தெரிவாகிய இரண்டு தமிழர்களிற்கும் வாழ்த்துகள்! தமிழர்கள் புலம்பெயர் தேசத்தில் அரசியலில் பலம் பெறுவது வரவேற்கத்தக்க விடயம். இதில் மாறுபாடு கிடையாது !

(“சாத்தான் வேதம் ஓதுகிறது..!” தொடர்ந்து வாசிக்க…)

கல்வியில் நாம் மீண்டு வர வேண்டும்

இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் நாங்கள் எங்களை சரி செய்து கொண்டு விஞ்ஞானத் துறையில் எங்களுடைய மாணவர்களை மேலே கொண்டுவரவில்லையென்றால் நாங்கள் இங்கே கூக்குரலிடுவதிலே எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். நாங்கள் சிங்கள மயமாக்கலுக்குள் சங்கமமாகி சரணாகதி அடைகின்ற நிலைமையே ஏற்படும். என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

(“கல்வியில் நாம் மீண்டு வர வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

’சமல் மட்டுமே தகுதியானவர்’

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறக்கூடிய நிலையில், ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மாத்திரமே இருப்பதால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, சமல் ராஜபக்ஷவைக் களமிறக்க வேண்டுமென, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா கோரியுள்ளார்.

(“’சமல் மட்டுமே தகுதியானவர்’” தொடர்ந்து வாசிக்க…)

வரதண்ணா ஒரு சகாப்தம்

இயலாத தாய்
சுட்டு வைத்த பணியாரம்
சிறுபிள்ளை பிராயத்தில்
கடை முழுதும் சென்று விற்றீர்…
விற்று வீடுவந்து
கல்வி தாகத்தால்
பள்ளிக்கும் ஓடுவீர்..

(“வரதண்ணா ஒரு சகாப்தம்” தொடர்ந்து வாசிக்க…)

திரைப்பட மேதை லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களை நினைவுகூரல்

திரைப்பட மேதை லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்

(Lester James Peries)

அவர்களை நினைவுகூரல்

இலங்கையின் உலகப் புகழ் வாய்ந்த திரைப்பட இயக்குநரும், கதாசிரியரும், தயாரிப்பாளருமான லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்கள் தமது 99ஆவது வயதில் 2018 ஏப்ரல் 29, 2018இல் காலமானதை நினைவுகூருமுகமாகவும், அஞ்சலி செலுத்துமுகமாகவும், அன்னார் இயக்கிய திரைப்படம் திரையிடலும், கலந்துரையாடலும்

காலம்: 2018 யூன் 11 திங்கட்கிழமை மாலை 6.30 முதல் 9.30 வரை

இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் கூட்ட அறை இல.1 (கனடா)     (Scarborough Civic Centre, 150 Borough Drive, On, M1P 4N7)

இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு: ஆக்கபூர்வ சிந்தனை மற்றும் செயற்பாட்டுக்கான அமையம்(Centre for Creative Thoughts and Action)

E-Mail : creathoughts1@gmail.com

அதிகாரத் தரப்புகளைத் திருப்தி செய்தே….ஒன்ராரியோ மாகாண சபைத் தேர்தல்

நடந்து முடிந்திருக்கும் ஒன்ராரியோ மாகாண சபைத் தேர்தலில் 2 தமிழர்கள் வென்றிருக்கின்றார்கள் என்பது எந்த விதத்திலும் கொண்டாட்டத்திற்குரியது அன்று. நல்லதோர் உதாரணமாக விஜய் தணிகாசலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரின் பிறந்தநாளிற்கும் கரும்புலிகள் தினத்திற்கும் பதிந்திருந்த முகநூல் குறிப்புகளை அவர் நீக்கி, தனது நிலைப்பாடு இப்போது அப்படி அல்ல என்று ட்வீற்றர் தளத்தில் குறிப்பிட்டிருந்ததை அவரது ஆதரவாளர்கள் கூட அவர் கட்சியின் அழுத்தத்தாலேதான் அப்படிச் செய்திருந்தார் என்றும் அதனையும் மீறி அவர் விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்பதற்காக அவருக்கு வாக்களிக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்திருந்தார்கள்.

(“அதிகாரத் தரப்புகளைத் திருப்தி செய்தே….ஒன்ராரியோ மாகாண சபைத் தேர்தல்” தொடர்ந்து வாசிக்க…)