‘அடேய் பாவிங்களா!’

 

தமிழ்நாட்டில் மூளைச் சாவுக்கு உள்ளான நபர்களிடமிருந்து உறுப்புகளை தானம் பெற்று, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம்
வெளிநாட்டுப் பணக்கார நோயாளிகளே பெருமளவு
பயன் பெற்றுள்ளனர். உறுப்பு மாற்று – திசு மாற்று அறுவை சிகிச்சைக்கான தேசிய அமைப்பின் இயக்குனர் பேராசிரியர் விமல் பண்டாரி இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

2017ஆம் ஆண்டு இதய மாற்றுக்காக மூளைச் சாவு அடைந்தோரிடம் இருந்து பெறப்பட்ட இதயங்களில்
25 விழுக்காட்டையும், நுரையீரல்களில் 33 விழுக்காட்டையும் வெளிநாட்டினரே பெற்றுள்ளனர்.

அதே சமயம் 5310 க்கும் மேற்பட்ட இந்திய நோயாளிகள், உறுப்புகளைப் பெறுவதற்காக காத்திருப்போர் பட்டியல் மூலம் காத்திருக்கின்றனர்.

இம் முறைகேட்டிற்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையே காரணம். தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளும், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையும் இணைந்தே இம்முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன.

எனவே, இம்முறைகேடு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். தவறு செய்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்திட அத்தகைய மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

தமிழகத்தில் நடைபெற்ற இம் முறைகேட்டை காரணம் காட்டி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகளைப் பெற்று வழங்கும் அதிகாரத்தை தமிழக அரசிடமிருந்து பறிக்க மத்திய அரசு முயல்கிறது.

இது மருத்துவ சேவை வழங்குவதில் மாநில அரசின் அதிகாரத்தை, உரிமையை பறிக்கும் செயலாகும். இது வன்மையான கண்டனத்திற்குரியது. மூட்டைப் பூச்சியை காரணம் காட்டி வீட்டைக் கொளுத்தும் செயலை
மத்திய அரசு செய்யக் கூடாது.
_________________________________________________

டாக்டர் ஜி.ஆர் ரவீந்திரநாத்
சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கப்
பொதுச் செயலாளர்
Ravindranath GR