’தேசிய ரீதியான போராட்டத்துக்கு வடக்கின் ஆதரவும் வேண்டும்’

நாடு பூராகவும் அதிபர், ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது ஆதரவு வங்குவதாகத் தெரிவித்த இலங்கை ஆசிரியர்சேவை சங்கத்தின் செயலாளர் புயல்நேசன், அதேபோல் வடமாகாண அதிபர், ஆசிரியர்களும் குறித்த போராட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் கூறினார்.

போராட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிப்புரிந்த நிலையில், உயிரிழந்த டயகம சிறுமிக்கு நீதி கோரி, இன்று (22) கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன், சிறுவர் மற்றும், பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரையோகத்தைக் கண்டித்தும், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன.

சிறுமிக்கு நீதி கோரி போராட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில் முறையான விசாரணையை வலியுறுத்தியும் சம்பவத்துக்குக்குக் கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பில் இன்று (21) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸின் நான்காவது அலையின் முதல் பாதியை இலங்கை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார். அத்தடன், கொழும்பில் 30 சதவீதமானோர் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

‘நேரம் கிடைக்கும் போதெல்லாம் கர்ப்பம் தரிக்காது இஷாலினி வன்புணர்வு’

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குச் சொந்தமான கொழும்பிலுள்ள வீட்டிலில்  பணிப்பெண்ணாக வேலைசெய்த  ஜூட் குமார் இஷாலினி என்ற சிறுமி, பலமாதங்களாக, நேரம் கிடைக்கும் போதெல்லாம்   பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

ஐரோப்பிய வெள்ளங்கள்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 180ஆக அதிகரிப்பு

ஜேர்மனி, பெல்ஜிய உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வெள்ளங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 180ஆக நேற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஜேர்மனியில் 156 பேர் உயிரிழந்ததுடன், பெல்ஜியத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற நேபாள பிரதமர்

நேபாள பாராளுமன்றத்தின் நம்பிக்கையை அந்நாட்டின் புதிய பிரதமர் ஷேர் பகதுர் டெயுபா பெற்றுள்ளார். அந்தவகையில், அடுத்தாண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் வரையில் அதிகாரத்தில் டெயுபா தொடரவுள்ளார். நேற்று பாராளுமன்றத்தின் கீழ்ச் சபையில் 165 வாக்குகள் பிரதமர் டெயுபாவுக்கு ஆதரவாகக் கிடைத்ததாகவும், 83 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததாகவும் சபாநாயகர் அக்னி சப்கொடா அறிவித்துள்ளார். சீனாவுடனான உறவுகளை முன்னாள் பிரதமர் கஹட்கா பிரசாத் ஒளி விரும்பியிருந்த நிலையில், இந்தியாவுக்கு அருகில் நேபாளத்தை பிரதமர் டெயுபா கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

’மாகாண எல்லைகளை கடக்க முடியாது’

திருமண நிகழ்வுகள் மற்றும் இறுதி சடங்குகளுக்காக மாகாண எல்லைகளை கடக்க முடியாது என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இலங்கை: கொரனா செய்திகள்

கொழும்பு மாவட்டத்தில் பதிவான கொவிட் தொற்றாளர்களில்  20 தொடக்கம் 30 சதவீதமானோர் டெல்டா திரிபு தொற்றாளர்களாக இருக்க வாய்ப்புள்ளது என பிரதி சுகாதார ​சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வாழ சிறந்த இடம் எது?

1.கேரளாவில் இருந்து வரும் மலையாளிகள், டீ கடை நாயர்கள், படிப்பிற்காக வருபவர்கள், மருத்துவத்துக்காக வருபவர்கள்

2. பிகார் மாநில தொழிலாளர்கள்

3. அஸ்ஸாம் மாநில தொழிலாளர்கள்

4. ஆந்திராவில் இருந்து வரும் சாலை பணியாளர்கள்

5. சிவகாசி மற்றும் திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுக்க நிரம்பியிருக்கும் வட இந்திய தொழிலாளர்கள்

6. பேங்குகளில் பணியமர்த்தப்படும் வட இந்திய பணியாளர்கள்

7. எல்லா TOLL GATE களிலும் நிற்கும் பக்காவான வேறுமாநில ஊழியர்கள்

8. பெரிய ஊர்களெங்கும் கடை வைத்து வியாபாரத்தை விரிவாகியிருக்கும் வட இந்திய வணிகர்கள் நகை கடை காரர்கள், ஊழியர்கள்

9. பானி பூரி விற்பவர்கள் (அய்யோ ஓஓஓஓ )

10 இவ்வளவு ஏன் சிஃனலில் சுற்றி திரியும் ஏழைகள், பலூன் விற்பவர்கள் பஞ்சு மிட்டாய் விற்பவர்கள்

இவர்கள் அனைவரையும் கேளுங்கள் இந்தியாவில் வாழ சிறந்த இடம் எதுவென்று ?

தயக்கமின்றி நம் தமிழ்நாட்டை கை காட்டுவார்கள்