பாராளுமன்றம் உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம சிறுமி யின் உயிரிழப்புகு நீதி கோரி, கொட்டகலை திம்புள்ள தோட்டத்தில் இன்று (27) பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திம்புள்ள தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் இந்தப்போராட்டத்தை தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் திம்புள்ள பகுதயில் உள்ள அம்மன் கோவிலுக்கு முன்பாக நடத்தினர்.

இறம்பொடை சிறுமி சடலமாக மீட்பு

கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை மேல் கடைவீதி பகுதி வீடொன்றிலிருந்து 15 வயது சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சிறுமி தனது  அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 04 மணியளவில் சிறுமியின் வீட்டார், 119   என்ற அவசர தொலைபேசி ஊடாக வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்றதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். இதைனையடுத்து, சடலம் தொடர்பில் எல்பொடை நீதிமன்ற நீதாவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு மரண விசாரணையின் பின் சடலம் நேற்று மாலை நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சிறுமியின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் சட்ட வைத்தியர் ஊடான  பிரேத பரிசோதனை இன்று காலை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கொத்தலாவல சட்டமூல எதிர்ப்பு; ஒன்லைன் ஓப்

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்ட மூலத்தை எதிர்த்து இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள், நாளை (28) ஒன்லைன் விரிவுரைகள் மற்றும் நிகழ்ச்சிகளில் இருந்து விலகுவர் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனங்களின் தலைவர் பேராசிரியர் ஷாம பன்னேகஹ தெரிவித்தார்.

பயணிகள் இல்லாததால் ரயில் சேவைகள் இரத்து

கொழும்பு கோட்டையில் இருந்து காலை 8.53 மணிக்கு அம்பேபுஸ வரை பயணிக்கும் ரயிலும் காலை 8.45 மணிக்கு களுத்துறை வரை பயணிக்கும் ரயிலும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த இரண்டு ரயில்களும் பயணிக்க போதுமான பயணிகள் இல்லாததால் சேவையிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளன என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும்  1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  299,366 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன . இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,349 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி,  270,356 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 23,678 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமியின் பெயரை சிங்களத்தில் மாற்றி கொடுத்த மாமா: டயகம சிறுமி வழக்கின் சாரம்சம்

டயகம சிறுமி மரணம்: வழக்கின் சாரம்சம்

மண்ணெண்ணெய் போத்தல் நடந்து சென்றது எப்படி?

11 நிமிடங்களில் சென்றிருக்கலாம் 2 மணிநேரம் தாமதித்து ஏன்?

சிறுமியின் பெயரை சிங்களத்தில் மாற்றி கொடுத்த மாமா

மண்ணெண்ணெய்யில் மாமி- சாரதியின் வாக்குமூலங்கள் முரணானது

சிறுமியின் சகோதரனுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தவர் யார்?

மண்சரிவால் ஒன்பது பேர் பலியானர்

ஹிமாச்சல பிரதேசத்தில் மலைப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில்  அகப்பட்டு  ஒன்பது பேர் பலியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் சாங்லா மலைப்பிரதேசத்தில் நேற்று சுற்றுலா பயணிகள்  குவிந்து காணப்பட்டனர்.  அப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டு மலைப்பகுதியில் இருந்து பெரிய பாறைகள் உருண்டு வந்தன. மேகமூட்டமாக இருந்ததால் கீழே பாலத்தில் நின்றிருந்த பயணிகளுக்குத் தெரியவில்லை.

இலங்கை: கொரனா செய்திகள்

இந்நாட்டில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்ட சகலரும் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொண்டதன் பின்னர்தான் நாடு முழுமையாக திறக்கப்படும் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். “நாளை அவ்வளவு கருமையானது அல்ல” என்றார்.செப்டெம்பர் இறுதிக்குள் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்ட நாடாக இலங்கை மாறிவிடும். அதன்பின்னரே நாடு முழுமையாக திறக்கப்படும் என்றார்.

கொழும்பில் பேய் மழை; காட்டாறு வௌ்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

நாட்டில் தற்போது நிலவிக்கொண்டிருக்கும் சீரற்ற வானிலை இன்னும் சில நாள்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும்   காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி – சு.க பேச்சு வெற்றிகரம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.