நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற நேபாள பிரதமர்

நேபாள பாராளுமன்றத்தின் நம்பிக்கையை அந்நாட்டின் புதிய பிரதமர் ஷேர் பகதுர் டெயுபா பெற்றுள்ளார். அந்தவகையில், அடுத்தாண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் வரையில் அதிகாரத்தில் டெயுபா தொடரவுள்ளார். நேற்று பாராளுமன்றத்தின் கீழ்ச் சபையில் 165 வாக்குகள் பிரதமர் டெயுபாவுக்கு ஆதரவாகக் கிடைத்ததாகவும், 83 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததாகவும் சபாநாயகர் அக்னி சப்கொடா அறிவித்துள்ளார். சீனாவுடனான உறவுகளை முன்னாள் பிரதமர் கஹட்கா பிரசாத் ஒளி விரும்பியிருந்த நிலையில், இந்தியாவுக்கு அருகில் நேபாளத்தை பிரதமர் டெயுபா கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.