பொலிகண்டியில் நாட்டப்பட்ட “இரண்டு கற்கள்” குழப்பம் – நடந்தது என்ன?

பொத்துவிலில் தொடங்கிய பேரணி பொலிகண்டியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்போடு நிறைவுபெற்ற நிலையில் நிறைவிடத்தில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் தொடங்கி நடைபெற்று முடிந்த போராட்டத்தினை தங்களது போராட்டமாக முடித்துவைக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னிலையில் சாணக்கியன் பொலிகண்டியில் கல் ஒன்றை நாட்டிவைத்தமையாலேயே குழப்பம் ஏற்பட்டதாக சம்பவத்தில் பங்குகொண்டவர்கள் தெரிவித்தனர்.

முல்லையின் எதிர்காலம் தொடருக்கு விண்ணப்பம் கோரல்

முல்லைத்தீவு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால், முல்லையின் எதிர்காலம் எனும் இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில், முல்லைத்தீவு, முள்ளியவளை, மாங்குளம், புதுக்குடியிருப்பு, விசுவமடு ஆகிய பிரசித்திபெற்ற இடங்களை மய்யப்படுத்தி அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

‛ஸ்விட்ச் டில்லி’ திட்டத்துக்கு கமல் பாராட்டு

அரசு பயன்பாட்டுக்கான வாகனங்களை, இலத்திரனியல் வாகனமாக மாற்றுவதோடு, இலத்திரனியல் வாகனம் வாங்குவோருக்கு, மானியம் அறிவித்த, டில்லி முதல்வரின், ‘ஸ்விட்ச் டில்லி’ திட்டத்துக்கு, கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்தால் பா.ஜ.,வுக்கு பாதிப்பு?

‘வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாய சங்கங்கள் நடத்தி வரும் போராட்டத்தால், உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படலாம்’ என, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விவசாயிகளின் போராட்டத்துக்கு, இந்திய அரசு அனுமதிக்க வேண்டும்

‘அமைதியான முறையில் விவசாயிகள் போராடுவதற்கு, இந்திய அரசு அனுமதிக்க வேண்டும்’ என, அமெரிக்க பாராளுமன்ற இந்தியாவுக்கான குழு வலியுறுத்தியுள்ளது.

கோரிக்கை நிறைவேறாமல் வீடு திரும்ப மாட்டோம்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனக்கூறியுள்ள பாரதிய கிஷான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத், எங்களது கோரிக்கை நிறைவேறாமல் வீடு திரும்ப மாட்டோம் என தெரிவித்துள்ளார். காசிப்பூர் எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மத்தியில் அவர் பேசியதாவது: எதிர்வரும் அக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை விவசாயிகளின் போராட்டம் நீடிக்கும்.

’சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும்’

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்த பிரபல பாப் பாடகி ரிஹான்னா கருத்துக்கு எதிராக இந்திய பிரபலங்கள் பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்தனர்.

அகதிகளை திருப்பியனுப்புவதை முடிவுக்கு கொண்டு வரவுள்ள ஐ. அமெரிக்கா

ஐக்கிய அமெரிக்க எல்லையை வந்தடையும் குவாத்தமாலா, எல் சல்வடோர், ஹொண்டூரஸிலிருந்து வந்த அகதிகளை திருப்பி அனுப்பும் ஐ. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தின் கீழான குறித்த நாடுகளுடனான ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டு வர ஐ. அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

கொவிட் 19: தொற்றிலிருந்து 807 பேர் குணமடைந்தனர்

கொவிட் 19 தொற்று காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வந்தோரில் மேலும் 807 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 63, 401 ஆக அதிகரித்துள்ளது.

டைல்கள் மற்றும் செரமிக் பொருட்கள் இறக்குமதிக்கு மீண்டும் தடை

டைல்கள் மற்றும் செரமிக் தயாரிப்புகளை இறக்குமதி செய்வதற்கு 2ஆம் திகதி அரசாங்கம் அனுமதி வழங்கிய நிலையில், மறுநாள் 3 ஆம் திகதி அந்தத் தீர்மானத்தை இரத்துச் செய்வதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் அறிவித்துள்ளது.