ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைவு

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதற்காக கட்சி தொடங்கும் வகையில் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றி இருந்தார். ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்ததும் மக்கள் மன்ற நிர்வாகிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். மன்றத்தில் இருந்து விலகி பல்வேறு கட்சிகளிலும் சேர்ந்து வருகிறார்கள். இதனால் ரஜினி மக்கள் மன்றம் எல்லா மாவட்டங்களிலும் காலியாகி வருகிறது.

‘ஈ.எல்.என் தாக்குதல் குறித்து எச்சரித்த கியூபா’

கொலம்பியத் தலைநகர் பொகொட்டா மீது தாக்குதலொன்றுக்கு, அந்நாட்டின் தேசிய விடுதலை இராணுவத்தின் (ஈ.எல்.என்) போராளிகள் திட்டமிடலாமென கியூபா எச்சரித்துள்ளதாக, கொலம்பிய பாதுகாப்பமைச்சர் டியகோ மொலானோ நேற்று தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

முல்லைத்தீவு மாவட்டத்தில், நீதிமன்றக் கட்டளையை மீறி, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக, பொலிஸாரால், நேற்று (08), முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இலங்கை: கொரனா நிலவரம்

கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் 571 இன்று(09) புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 70,806 ஆக அதிகரித்துள்ளது.  இதேவேளை, கொவிட் தொற்றிலிருந்து இன்றைய தினம் 912 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

’இருவர் இருந்திராவிடின் பொத்துவிலிலேயே பேரணி முடிந்திருக்கும்’ – சிவாஜிலிங்கம்

சுமந்திரன், சாணக்கியன் இல்லாவிட்டால் போராட்டம் பொத்துவிலிலேயே முடிந்திருக்கும் என, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன், பொத்துவில்-பொலிகண்டிப் பேரெழுச்சி தனிப்பட்டவர்களின் வெற்றி அல்ல எனவும், அவர் கூறினார்.

’உயர்ந்த பதவியில் ஜனாதிபதி இருக்க வேண்டும்’ – விமல் வீரவங்ச

ஸ்ரீலங்கா பெரமுனவின் உயர்ந்த பதவியொன்றில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ர‌ஷ இருக்க வேண்டும் என்பதே தமது அபிப்பபிராயமாகுமெனத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவங்ச, அதற்காக மஹிந்த ராஜபக்ஷவை தலைமைப் பதவியில் இல்லாமலிருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல எனவும் கூறினார்.

ஆளும் தரப்பில் விமலுக்கு கடும் எதிர்ப்பு

ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், முக்கிய உறுப்பினரான அமைச்சர் விமல் வீரவன்ச இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அறியமுடிகிறது. அமைச்சர் விமல் கட்சியை விமர்சித்து ஆற்றிய உரை குறித்து, இன்றைய கூட்டத்தில ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டதையடுத்து, உறுப்பினர்களுக்கிடையில் கடும் வாதங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாகவே தான் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அமைச்சர விமல் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

பெயர் பலகையில் திருத்தம்…

யாழ்ப்பாணத்தில், புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பஸ் நிலையத்தின் பெயர் பலகையில், தமிழில் இரண்டாம் மொழியாக இணைக்கப்பட்ட இடங்களின் பெயர்கள் முதலாவது இடத்துக்கு மாற்றப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பெயர் பலகையில் “பேரூந்து நிலையம்” என எழுதப்பட்ட பெயர் “பேருந்து நிலையம்” எனவும் திருத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு

மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு சென்னையில் பெப்ரவரி 21இல் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இலங்கை: கொரோனா விபரம்

நாட்டில் மேலும் 514 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 862 ஆக உயர்ந்துள்ளது. இன்று 740 பேர் குணமடைந்த நிலையில் தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 64 ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது.