எஸ்.பி பாலசுப்பிரமணியம் குணமடைந்தாரா…? சரண் விளக்கம்

கொரோனா பாதிப்பில் இருந்து எஸ்.பி பாலசுப்பிரமணியம் குணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இது தொடர்பாக அவரது மகன் சரண் விளக்கமளித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதாக தான் ஒருபோதும் கூறவில்லை

மூத்த தலைவர் சிலர் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதாக தான் ஒருபோதும் கூறவில்லை என ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து டுவிட்டரில் தான் தெரிவித்த கருத்துகளைத் திரும்பப் பெறுவ தாக மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு நிலையான, முழுநேரத் தலைமைதேவை எனக்கோரி கட்சியில் உள்ள 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார்கள். அந்த கடிதம் எழுதிய வர்களில் குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்டோரும் அடங்கும்.

பறவைகளைப் பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடல்

உள்நாட்டு பறவைகள், வலசப் பறவைகளைப் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று, யாழ்ப்பாணப் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக தாவரவியல், விலங்கியல் விரிவுரையாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

சிறைச்சாலைகளிலிலுள்ள பிள்ளைகளை விடுவிக்குமாறு அறிவுரை

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில், சிறைவாசம் அனுபவித்து வரும் 46 பெண்களுடைய பிள்ளைகளும் சிறைச்சாலைக்குள்ளேயே தங்கும் நிலைமை காணப்படுவதால், அவ்வாறான சிறுவர்களை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வலுகட்டாயமாக மணிவண்ணன் வெளியேற்றம்

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்துக்கு ஊடக சந்திப்பு நடத்த சென்ற மணிவண்ணன் மற்றும் ஆதரவாளர்கள் வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

‘சிறுதானியப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க வேண்டும்’

தற்காலத்தில், சிறுதானியங்களுக்கான பயிர்ச்செய்கையானது விவசாயிகளிடையே அருகிவரும் நிலையில் காணப்படுவதால், சிறுதானியப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயநிலைக்குள் நாம் தள்ளப்பட்டுள்ளதாக, மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் அற்புதச்சந்திரன் தெரிவித்தார்.

வேகத்தை குறைத்து விவேகமாகச் செயற்படுங்கள்

வேகத்தை குறைத்து, விவேகமாகச் செயற்படுவதன் மூலமே, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துகளைக் குறைக்க முடியுமென, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனாநந்தா, இன்று (20) தெரிவித்தார்

இந்தியாவில் கல்விகற்ற 113 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

(க. அகரன்)

அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு திட்டத்தில், இந்தியாவுக்கு அகதிகளாக சென்று கல்விகற்று பட்டம் பெற்ற 113 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என, வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

’19ஆவது திருத்தம் நீக்கப்படும்; புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்’

பல்வேறு அரசியல் முரண்பாடுகள் காரணமாக 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதாக பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

19ஐ நீக்கி, 20ஐ உருவாக்க அமைச்சரவை அனுமதி

அரசியலமைப்பின் 19ஆவது திருத்ததினை நீக்கி, 20ஆவது திருத்தத்தினை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.