கேரளாவில் இன்று 1038 பேருக்கு கரோனா தொற்று: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

கேரளாவில் இன்று 1038 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது:
கேரளாவில் நாளுக்கு நாள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நமது மாநிலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கியதற்கு பின்னர் இன்று தான் முதன்முதலாக நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

மயிலிட்டி மீன்பிடி இறங்குதுறைக்கு எரிபொருள் வழங்க ஏற்பாடு

மீன்பிடி துறைமுகத்தைப் பயன்படுத்தும் மீன்பிடிக் கலங்ளுக்கு எரிபொருள் வழங்குவதற்கான உடன்படிக்கை, இன்று (20) கைச்சாத்திடப்பட்டது. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால், மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்ததுக்கும் இடையிலேயே, இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

’கடவுளால் மட்டும்தான் கர்நாடக மாநிலத்தை கொரோனாவிலிருந்து காப்பாற்ற முடியும்’

கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்தால் கடவுளால் மட்டும்தான் கர்நாடக மாநிலத்தை காப்பாற்ற முடியும் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலு பேசியது சர்ச்சையாகியுள்ளது.

’உள்நாட்டு இறப்பர் உற்பத்தி மேம்படுத்தப்படும்’

இறப்பருக்கு உரிய விலையை பெற்றுக்கொடுத்து உள்நாட்டு இறப்பர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு முன்னுரிமையளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். இதன்மூலம் தொழிலற்றவர்களை கைத்தொழில் துறையை நோக்கி ஈர்க்க முடியுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லூர் திருவிழா குறித்து பிரதமரின் அதிரடி தீர்மானம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு அதில் கலந்துகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.

யாழ். பல்கலைகழக மாணவர்கள் 9 பேர் மீட்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வைத்தியத்துறை மாணவர்கள் 9 பேர், நேற்று (15) நண்பகல் வேளையில் உடையார்கட்டு வனப்பகுதிக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர். அதனை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

மாலைத்தீவில் இருந்து 177பேர் மத்தல வருகை

மாலைத்தீவில் தங்கியிருந்த 177 இலங்கையர்கள் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் அங்குள்ள சுற்றுலா விடுதிகளில் பணியாற்றிய ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஈரோஸ் ஜனநாயக முன்னணி கூட்டமைப்புடன் கைகோர்த்தது

தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழரது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி, தனது பூரண ஆதரவை தெரிவித்துள்ளது.

‘மன்னாருக்கு வருவதற்கு யாருக்கும் அனுமதி வழங்க கூடாது’

இந்தியாவில் இருந்து எவரும் கடல் மார்க்கமாக மன்னார் இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்க கூடாதெனவும் இந்திய டோலர் படகுகளை இலங்கை கடல் எல்லைக்குள் கூட வர அனுமதி வழங்க வேண்டாமெனவும், கடற்படை அதிகாரியிடம் மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.