கொரோனா பற்றி WHO…

சில நாடுகளின் அரசுகள் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் இந்த தொற்று மேலும் மோசமாகிக்கொண்டே போகும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் எச்சரித்துள்ளார்…
இந்த தொற்றினைக் குறைப்பதற்கான நிரூபிக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நாடுகளில் அபாயகரமான அளவில் தொற்று அதிகரித்துக்கொண்டு செல்கின்றன என்றும்,
தாம் குறிப்பாக கூற விரும்பவில்லை என்று கூறிய அவர், நிறைய நாடுகள் தப்பான பாதையில் செல்கின்றன என்று ஜெனீவாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்…

தலைவர்கள் மாற்றி மாற்றிப் பேசுவதால், இந்த உலகத் தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் மக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள்…
எந்த தலைவர், எந்த நாடு என்று அவர் வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்றாலும், அவரது குறிப்புகள், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் தொற்று விவகாரத்தை சரியாக கையாளவில்லை என்று விமர்சிக்கப்படும் பிற உலகத் தலைவர்களைக் குறிப்பதாக இருக்கலாம் என்று பார்வையாளர்கள் கருதுகிறார்கள்…

சீனாவில் கடந்தாண்டு இறுதியில் முதல் முதலில் கண்டறியப்பட்டதாக அறியப்படும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் தற்போது உலகம் முழுவதும் 1.28 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 5.68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வர…

உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்த தகவலை இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரான்ஸ்லேஸ்னல் மெடிசன் அண்ட் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் வாடிம் டாரசோவ் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், சாவு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எந்தவித அறிகுறியும், வேறு எந்த நோய் தொற்று இல்லாதவர்களும் மருத்துவமனையில் சேர்ந்த ஒன்றிரண்டு நாட்களில் உயிரிழக்கும் அபாயம் நிலை ஏற்பட்டுள்ளது…

இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை 31-ந்தேதி வரை தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என தெரிவித்துள்ளது. முன்னதாக ஜூலை 15ம் தேதி வரை பொதுப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ஜூலை 31-ந்தேதி வரை போக்குவரத்திற்கு தடை நீட்டிக்கப்பட்டது…