’கொரோனா’ சமூகத்தில் வியாபிக்கவில்லை

கொரோனா வைரஸ் பரவலானது இன்னும் சமூகத்தில் அதிகம் வியாபிக்கவில்லை என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு அமைய, 3.5 தொடக்கம் 4 சதவீதமானோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் புதிதாக 23 தொற்றாளர்கள்

நீர்கொழும்பு பொதுச் சுகாதாரப் பிரிவில் புதிதாக 23 பேர், கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என, நீர்கொழும்பு நிர்வாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வசந்த சோலங்க தெரிவித்தார். நகரின் சில பிரதேசங்களில் 155 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சீனாவில் 8 மாதங்களில் முதன்முறையாக ஒருவர் மரணம்

சீனாவில், எட்டு மாதங்களில் முதன்முறையாக ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். அவர், ஹெபெய் (Hebei)மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த மாநிலத்தின் பல நகரங்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. சீனாவில், இன்று புதிதாக 138 பேரிடம் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டது.

காத்தான்குடி தனிமைப்படுத்தல் மீண்டும் நீடிப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் சட்டம், எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

யானைகளும் தேனீக்களும்

ஆப்பிரிக்க விவசாயிகள் எல்லோரும் விலங்கியலாளர் டாக்டர் லூசி கிங்குக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்க யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்வது அங்கே வழக்கமான விஷயமாக இருந்து வந்தது. அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க ‘யானைகளும் தேனீக்களும்’ என்ற பிராஜக்டை உருவாக்கினார் லூசி.

ரஞ்சன் எம்.பி குடியுரிமையை இழப்பார்

நீதிமன்றத்தை அவமதித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவை, குற்றவாளியாக இனங்கண்ட உயர்நீதிமன்றம், அவருக்கு நான்கு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நேற்று (12) தீர்ப்பளித்தது.

பொங்கல், துக்ளக் விழாக்களில் பங்கேற்கிறார் ஜெ.பி.நட்டா

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, ஒருநாள் பயணமாக நாளை சென்னை வருகிறார். பாஜக சார்பில் நடக்கும் பொங்கல் விழாவிலும், ‘துக்ளக்’ ஆண்டு விழாவிலும் பங்கேற்கிறார்.

பிள்ளையான் விடுதலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜோசேப் பரராஜசிங்கம் கொலைவழக்கு–நாளை இறுதி தீர்ப்பு

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கம் அவர்களின் கொலை தொடர்பாக பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடகாலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

எமது தேசத்தின் நிலமை

(Nivetha Sathiyan)

பல்கலைகழகத்தில் படிக்கும் ஒரு மாணவி தனக்கு அறிமுகமில்லாத புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய ஒரு இளைஞனுக்கு சேரவேண்டிய சிறு தொகைப்பணத்தை தனக்கு தெரிந்த நண்பர் கேட்டார் என்பதற்காக தனது பெயரில் பெற்றுக் கொடுத்ததற்காக பலவருடங்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பூசா சிறையில் அடுக்கப்பட்டு அத்தனை சித்திரவதைகளையும் பெற்றாள். அவள் இயக்கத்துடன் தொடர்புடையவள் அல்ல, ஆயுத பயிற்சி பெற்றவளுமல்ல அமைதியான தானுண்டு தன் படிப்புண்டு என்று இருப்பவள்.