இன்றைய இலங்கை அரசியல் யதார்த்தம்

பேரினவாத-மக்கள் விரோத-தரகு முதலாளிகளின் அரசுக்கு,

தமிழ்த் தேசியத்தின் எதிர்ப்புக்குரலே ஒரேயொரு எதிர் சக்தியாக தற்போது விளங்குகிறது!

இந்த எதிர்ப்புக் குரலை கைவிடும் போக்கு என்பது, இந்த அரசுடன் கூட்டுச்சேர்ந்து இயங்குவது என்ற பொருளையே தரும்…

இந்த பிற்போக்கு அரசுடன் கூட்டிணைந்து தங்கள் நலனையும், தங்கள் வர்க்கம் சார்ந்த நலனையும் பாதுகாத்தல், தங்கள் நலன்களை பெற்றுக்கொள்ளல் என்பதே இதன் அரசியல் போக்காகும்…

அதற்கான பல சம்பவங்களும் சான்றுகளும் இப்போது வெளிப்பட்டு வருகின்றன…

மறுபுறமாக இந்தப் பிற்போக்கு அரசுடன் இணைந்து தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை மூடிமறைக்க, மழுங்கடிக்கிற காரியங்களை மட்டுமே செய்யமுடியும்!!

அதனையும் இன்று காண்கிறோம்.

இறுதியாக அரசுடன் இணைந்து மக்களை ஒடுக்கும் கடமையை செய்யவும் அதற்குத் துணைபுரியும் பணிகளை மட்டுமே செய்யலாம்…

தமிழ்த் தலைமைகளுக்கு தமிழ் மக்கள் சார்ந்து யுத்தத்தால் தோற்றுவிக்கப்பட்ட பிரச்சினைகளையும், யுத்தத்தை தோற்றுவித்த பிரச்சினைகளையும் மையமாகக் கொண்ட அரசியலைக் கைவிட்டால் இருக்கிற ஒரேயோரு பாதை….

வேறு என்னவாக இருக்க முடியும்…

விடை அறிய வேண்டிய முக்கியமான – தீர்க்கமான ஒரு காலம்!!

(விஜய்)