கொரனாவின் வறுமை…. இந்தியாவில்

(Rathan Chandrasekar)

ஜார்கண்ட்,
தன்பாதிலுள்ள பன்ஸ்முரி கிராமம்.
அங்கே செங்கல் சூளைத் தொழிலாளர்கள் நடுவே –
தலையில் செங்கற்கள் சுமந்து நடந்துவரும் இருபது வயதான ‘பழங்குடி இன’த்தைச் சார்ந்த இளம்பெண்ணைப் பார்த்து பெருமூச்செறிகிறார்கள் கிராமவாசிகள்.
விவரமறிந்த வெளியூர்க்காரர்கள் திகைத்துப் போகிறார்கள்.