பொங்காத பொங்கல்!

(வீ.ஏ.கந்தசாமி)

(தைப்பாங்கல் தினத்தை முன்னிட்டு, 56 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இக்கட்டுரை, இலங்கையின் இன்றைய நிலைமைக்குமான பொருத்தப்பாடு கருதி பிரசுரமாகின்றது)

மக்களின் உற்பத்திக்கான போராட்டத்தில் உதித்தது பொங்கல் தினம். உழவுத் தொழிலைப் பிரதானமாகக் கொண்ட, சமுதாய நடைமுறையின் வெளிப்பாடாக முன்வந்த பொங்கல் தினம், தமிழர் சமுதாயத்தின் தனித்துவமான தினமாக உயர்ந்து நிற்கிறது.