ஹாட்ரி இஸ்மாயில் (Qadri Ismail) காலமானார்!

(Maniam Shanmugam)

இலங்கையின் பிரசித்தி பெற்ற ஆங்கில மொழி ஊடகவியலாளரும், அமெரிக்காவின் மின்னெஸோரா (Minnesota) பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஹாட்ரி இஸ்மாயில் திடீரென காலமான செய்தி வந்து கிடைத்துள்ளது.அவரைப் பற்றி நான் ‘தேனீ’ இணையத்தளத்தில் புலிகளின் வதை முகாமில் எனது அனுபவங்கள் பற்றி எழுதிவந்த கட்டுரைத் தொடரில் 23.09.2012இல் எழுதிய குறிப்பைக் கீழே தந்துள்ளேன். அவரது மறைவுக்கு எனது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.