நீயா, நானா? யாருக்கு யார் அச்சுறுத்தல்?

(சுப்பிரமணியம் பாஸ்கரன்)

‘ஒரு யானை இருந்தால், ஒரு வனத்தையும் உருவாக்கலாம்’ என்பது முதுமொழி. ஆனால், இன்றைய நிலையில் யானைகள் காடுகளுக்குள் வாழ முடியாமல் வீடுகளுக்குள் ஓடோடி வருகின்றன. காடுகளின் காவலனாக விளங்கும் யானைகள், பல விதமான அச்சுறுத்தல்களைச் சந்திப்பதாலேயே இந்நிலைமை தொடர்கின்றது.