தோழர் பத்மநாபாவும் ராஜீவ் காந்தியும்

தோழர் கேதீசும் நானும் கூட சென்றிருந்தோம். அதனை தொடந்து மேலும் பல தலைவர்களை சந்த்தித்துவிட்டு சென்னை திரும்பினோம். தோழர் நாபா படுகொலை செய்யப்பட்ட பின்னர் அக்டோபர் மாதத்தில் தோழர் கேதீஸ் திரு ராஜிவ் காந்தியை இறுதியாக சந்த்தித்தார். EPRLF வெளியிட்ட நினைவு மலருக்காக இந்த செய்தியை பெறுவது தொடர்பாகவே அந்த சந்திப்பு நிகழ்ந்தாலும் அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் ஆர்வமுடன் பேசியதாக தோழர் கேதீஸ் பின்னைய ஒரு நாளில் தெரிவித்தார்.

திரு ராஜிவ் அவர்களின் அக்டோபர் 1990 இல் வரையப்படட இந்த சுருக்கமான நினைவுக்குறிப்பில் தோழர் நாபா படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் நடந்த சந்திப்பு பற்றி கூறியுள்ளார். மேலும் தமிழர்களின் பாதுகாப்பு, அரசியல் உரிமை, ஐக்கிய இலங்கைக்குள் நியாயமான தீர்வு, இதுபோன்ற நீண்ட நாட்கனவுகளை நிஜமாக மாற்றுவதற்கு என இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் மூலம் திறக்கப்படட கதவுகள் துர்அதிர்ஷ்ட்ட வசமாக மூடப்பட்டத்தையும் குறிப்பிடுகிறார்.

மேலும் தோழர் நாபாவினதும் தனது தாயரினதும் பிறந்த நாட்கள் ஒரே நாட்களாக இருப்பதையும் இருவருமே உன்னத இலட்சியங்களுக்காக போராடி தியாகிகள் ஆனவர்கள் என்பதையும் தனது செய்தியில் பதிவு செய்திருக்கிறார். திரு ராஜிவ் காந்திக்கு தோழர் நாபா மீதிருந்த நம்பிக்கையையும் நல்லெண்த்தையும் அவரது இந்த செய்தி சுருக்கமாக இருப்பினும் மிக ஆழமாக சொல்லி நிற்கின்றது.