குடிநீருக்காக அலையும் மக்களை கவனிப்பார் யாருமில்லை!!!

நாட்டின் கிழக்கு மற்றும் ஏனைய பல பிரதேசங்களில் நிலவுகின்ற வரட்சி காரணமாக வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் கிராம மக்கள் குடிநீர் இன்றி மிகவும் கஷ்ட நிலையில் வாழ்கின்றனர்.

நல்ல கட்டுரை. வெட்டி – சாறு கொடுத்திருக்கிறேன்.

ராகுலின் முடிவை ‘காலத்தின் கட்டாயம்’ என்று காங்கிரஸ்காரர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். பதவியில் இல்லாவிட்டாலும் ராகுல்தான் இந்திய அளவில் காங்கிரஸின் முகம்.
அது மாறப்போவதில்லை.

காஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்

இன்று, காஷ்மிர் கொதி நிலையில் உள்ளது. உலகிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், காஷ்மிரியர்களுக்காகத் தமது ஆதரவை வழங்கியுள்ளார்கள். காஷ்மிரில் நிகழ்த்தப்பட்டது, மிகப்பெரிய அநியாயம் என்பதை ஒடுக்கப்பட்ட, உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் அறிந்திருக்கிறார்கள்.

சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு செப்டெம்பர் 3ஆம் திகதி

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு செப்டெம்பர் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இந்த விடயத்தை கூறினார்.

‘பேச்சுவார்த்தையின் இறுதியில் வேட்பாளர் மாறலாம்’

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடம்பெறும் பேச்சுவார்த்தை நிறைவடையும்போது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக இல்லாமல் போவதற்கும் சந்தர்ப்பம் உள்ளதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் ஜனநாயகப் போக்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளும்

(இலட்சுமணன்)

முள்ளிவாய்க்காலில், 2009ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஸ்தம்பிக்கச் செய்யப்பட்டதன் பின்னர்தான், தாம் முழுநேரப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் விடுதலைப் புலிகள் காலத்தில், பகுதி நேரமாகத்தான் அரசியலில் ஈடுபட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சி, புதுக் கதையொன்றைச் சொல்லி வருகின்றது. இந்தக் கருத்துத் தொடர்பில், தமிழ் மக்களிடம் பல்வேறுபட்ட ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.

மன்பிரட் மக்ஸ்-நீவ்: வெறுங்கால் பொருளாதாரம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உலக வரலாற்றில் மனித குலத்தின் வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் பலர் தொடர்ச்சியாகப் பங்களித்தும் போராடியும் வந்துள்ளார்கள். இன்று, மனித குலம் அடைந்துள்ள வளர்ச்சி, மனித குலத்தின் மீதும் சமூகத்தின் மீதும், அக்கறை உள்ள மனிதர்களாலேயே சாத்தியமானது. இன்று, மனிதன் செல்வதற்காகவும் இலாபத்துக்காகவும் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும், அமைப்பொன்றில் சிக்கி இருக்கிறான். இந்த அமைப்பு, அவனைச் சுரண்டி, அவனைத் தின்று கொழுத்து, அவனை அழித்துக் கொண்டிருக்கிறது.

மஹிந்தவும் 13 பிளஸூம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)
“இரண்டு வருடங்களில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும்” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த மாதம் வடக்கில், கந்தரோடையில் நடைபெற்ற பாடசாலை வைபவமொன்றின் போது கூறியிருந்தார். தமது அரசாங்கத்துக்கு, நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை பலம் இல்லாதிருந்தமையே, கடந்த காலத்தில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க முடியாமல் போனதற்குக் காரணம் எனவும் பிரதமர் அக்கூட்டத்தில் கூறினார். அதேபோல், எதிர்க்கட்சிக் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷ, தாம் தலைமை தாங்கப் போகும் பொதுஜன பெரமுன பதவிக்கு வந்தால், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, தமது ஆட்சிக்காலத்தில், தாம் வாக்குறுதியளித்த, ‘13 பிளஸ்’ என்ற திட்டத்தை வழங்குவதாகக் கடந்த வாரம் கூறியிருந்தார்.

ரணிலின் கைகளில், கோட்டாவின் வெற்றி-தோல்வி

(புருஜோத்தமன் தங்கமயில்)
எதிர்பார்க்கப்பட்டது போல, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, நந்தசேன கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்‌ஷக்கள் தோற்கடிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட்ட போது, அவர்களின் மீளெழுகை இவ்வளவு துரிதமாக நிகழும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

ரணிலின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

வவுனியாவுக்கு இன்று பிற்பகல் வருகை தந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், கவனயீர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொண்டனர்.