இன்று மட்டும் 609 பேருக்கு கொரோனா

இன்று மட்டும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 496 பேர் பேலியகொட மீன் சந்தையைச் சேர்ந்தவர்கள். 48 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களைச் சேர்ந்தவர்கள், காலி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த ஐவரும் பேருவளை மீன்பிடித் துறைகத்தில் இருபது பேரும் அவ்வாறவர்களுடன் ​நெருங்கிய தொடர்புகளை பேணியிருந்த 40 பேரும் அடங்குகின்றனர் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தீண்டாமைக்கு எதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சி ஊர்வலத்தின் 54ஆவது ஆண்டு நினைவாக…

சரியாக 54 ஆண்டுகளுக்கு முன்னர் 1966 ஒக்ரோபர் 21இல் “சாதி அமைப்பு தகரட்டும்! சமத்துவ நீதி ஓங்கட்டும்!!” என்ற விண்ணதிர்ந்த கோசங்களுடன் ஊர்வலம் ஒன்று இலங்கையின் வட பகுதி நகரான சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாண நகரை நோக்கிப் புறப்பட்டது. அந்த ஊர்வலத்தை நடத்தக்கூடாது என அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் பொலிசார் தடை விதித்தபோதும் ஊர்வலம் திட்டமிட்டவாறு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இலங்கை வடபகுதிக்கு குடிபெயர்ந்த மலையக தமிழர்களின் தொகை வீதம் .. பிரதேச வாரியாக

கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனம் செய்த ஆய்வு ஒன்றில் பின்வரும் அளவில் மலையகத் தமிழர்கள் வடக்கிலே வாழ்கின்றனர் என அறியமுடிகின்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப்பிரிவுக்கு 26 கிராம சேவகர் பிரிவுகளில் 15 கிராம சேவகர் பிரிவுகளில் 50 சதவீதத்துக்கு அதிகமானோர் மலையகத் தமிழர்களாக உள்ளனர்.

20க்கு ஆதரவாக 156 வாக்குகள்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 156 வாக்குகள் கிடைத்தன. 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 65 வாக்குகள் கிடைத்தன. அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார்.

பொலிவிய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை உரிமை கோரிய சோஷலிசவாதிகள்

பொலிவியாவின் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது சுற்று வாக்களிப்பின் தேவையில்லாமல் அந்நாட்டின் சோஷலிச வேட்பாளரான லூயிஸ் அர்சே ஜனாதிபதித் தேர்தலில் வெல்வார் என உத்தியோகபூர்வமற்ற வாக்கெண்ணிக்கை நேற்று வெளிப்படுத்துகையில், அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி இவோ மொராலெஸின் இடதுசாரிக் கட்சி பதவிக்குத் திரும்புவதை அண்மித்துள்ளது.

ஜெயலலிதாவின் கூற்றை விட, முரளியின் கூற்று மோசமானதா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

கிரிக்கெட் விளையாட்டின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றி, தமிழகத்தில் ‘800’ என்ற பெயரில் தயாரிக்கப்படவிருந்த திரைப்படம் தொடர்பாக, அங்கு எழுந்திருக்கும் சர்ச்சை, இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள், பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினையே தவிர வேறொன்றும் அல்ல!

மாநகர சபையையும் இழந்தார் மணி

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் பதவியை சட்டத்தரணி வி.மணிவண்ணன் இழந்துவிட்டாரென அறிவித்துள்ள யாழ்ப்பாணம் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகர் இ.கி.அமல்ராஜ், இது தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் கோட்னீஸ் அவர்களின் 110ஆவது பிறந்த தினம்

யப்பானிய ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போரடிய சீன மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு உதவுவதற்காக சீனாவுக்கு சென்ற ஐவர் அடங்கிய இந்திய மருத்துவர் குழுவில் ஒருவராகச் சென்று, சீன மண்ணிலேயே தனது தியாக மரணத்தைத் தழுவிக்கொண்ட இந்திய டாக்டர் துவாரகாநாத் கோட்னீஸ் – Dwarkanath Kotnis – (சீனப் பெயர் ஹீ டைகுவா – Ke Di Hua) அவர்களின் 110ஆவது பிறந்த தினத்தை ஒக்ரோபர் 10ஆம் திகதி சீன மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாகக் கொண்டாடியுள்ளனர்.

இலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டமூலமே, இன்றைய பேசுபொருளாகியுள்ளது. அதற்கான ஆதரவும் எதிர்ப்பும் இலங்கைச் சமூகங்களின் வெவ்வேறு மட்டங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக வெளிப்படுகின்றன.

ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்து சென்றமையின் ஊடாக அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து பதியுதீனை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.