இலங்கைக்கு இராணுவ சேவை கட்டாயமா?

(கவிதா சுப்ரமணியம்)

இராணுவத்துக்கு கட்டாயமாக ஆட்களைச் சேர்க்கும் நடைமுறை, பண்டைய மெசொப்பெத்தேமியா காலத்துக்கு, அதாவது ஆயிரக்காணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். ஆனால், அண்மைய நவீன வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, பிரெஞ்சுப் புரட்சியில் இருந்தே ஆரம்பமாகின்றது. 17, 18ஆம் நூற்றாண்டுகளில், பிரஸ்ஸியா, சுவிட்ஸர்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளாலும் கட்டாய இராணுவ சேவை வலியுறுத்தப்பட்டதாக அறியமுடிகிறது.

தோழர் ஜெமினியுடனான நினைவுகள்…..

(தோழர் போல்)

எனது மாமியாரை நேற்றைய தினம் அடக்கம் செய்து விட்டு வீடு திரும்பிய பின் ஜெமினியின் துயரச்செய்தி வந்தடைந்தது.
ஏற்கனவே சுகவீனம் உற்றிருக்கிறார் என்று கேள்விப்பட்டது முதல் எனது குடும்பத்தின் இழப்புக்கள் மத்தியிலும் மனது படபடத்துக்கொண்டேயிருந்தது.

அடுத்த வாரத்தில் 6 இலட்சம் தடுப்பூசிகள்

இந்தியாவிலிருந்து இம்மாதம் 27ஆம் திகதி 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முதல் அலையில் மிகச் சிறப்பாக கொரனாவை கையாண்ட இலங்கை அரசு இரண்டாவது அலையிd; அதிக தாக்கத்த்தால் திணறும் நிலையில் இந்தத் தடுப்பூசிகள் ஒரு நல்ல நிலமைகளை எற்படுத்தும் என்று இலங்கையர்கள் நம்புகின்றனர்

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1 கிலோ 570 கிரேம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபரொருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் இன்று (23) கைது செய்துள்ளனர். குச்சவெளி, மதுரங்குடா -செந்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பவித்ராவுக்கு கொரோனா தொற்று உறுதி, மேலும் 353 பேருக்கு தொற்று உறுதி

நாட்டில் மேலும் 353 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை இதனால் 57 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளதாகவும், 49 ஆயிரத்து 261 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேனி இணையத்தள ஆசிரியர் ஜெமினி எம் விட்டுப் பிரிந்தார்

மாற்றுக் கருத்தாளர்களுக்கு தளம் அமைத்துக் கொடுத்த தேனி இணையத் தள ஆசிரியர் ஜெமினி என எல்லோராலும் அறியப்பட்ட கங்காதரன் கொரனா காலகட்டதில் நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டிருந்த வேளையில் எம்மை விட்டுப் பிரிந்தார்.

பண்பாட்டு ஆக்கிரமிப்பின் இன்னோர் அத்தியாயம்: குருந்தூர் மலையமர்ந்த கௌதமர்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஈழத்தமிழரின் இருப்புக்கான போராட்டம், இன்று உள்ளூர் களங்களிலேயே அரங்கேறுகிறது. எமது உரிமைகளுக்கானதும் இருப்புக்கானதுமான போராட்டத்தின் மையப்புள்ளி எமது வாழ்விடங்களே ஆகும்.

வெடுக்குநாறி கோவில் நிர்வாகத்தினரும் பூசகரும் மறியலில்

வவுனியா நீதிமன்றால் பிடிஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர், இன்று ஆஜராகியிருந்த நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிபதி பணிப்பு

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை வழக்கு முடியும் வரையில் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும், மேய்ச்சல் தரையைப் பாவிப்பதை தடைசெய்யவேண்டாம் எனவும் மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார்.

’இராணுவத்தினரே நிலாவரையில் கிடங்கு வெட்டினர்’

சிவில் உடையில் வந்த இராணுவத்தினரே, நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள் என, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.