17ஆம் திகதி ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை?

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது, எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் விசேட அனுமதி பெற்று விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று(12) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது

வழமைக்குத் திரும்பிய மலையகம்

நாட்டில் நடைமுறையில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணிமுதல் தளர்த்தப்பட்டதை அடுத்து மலையகத்தில் நிலைமைகள் வழமைக்கு திரும்பின.

சஜித் அணியிலிருந்து மேலும் அறுவர் விலகுவர்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்க அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்​டோ தீர்மானித்துள்ளார். இந்நிலையில், அந்த அணியிலிருந்து இன்னும் அறுவர் விலகி, சுயாதீனமாக இயங்க உள்ளனர் என்னும். அதன்பின்னர், புதிய அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்க உள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

இலங்கை தொடர்பில் சிங்கப்பூர் எச்சரிக்கை

அத்தியாவசிய  நடவடிக்கைகளைத் தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் இலங்கைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு சிங்கப்பூர் பிரதமர் அந்நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மஹிந்த போய்விட்டார்; இனி சஜித் பொறுப்பேற்க வேண்டும்!

(புருஜோத்தமன் தங்கமயில்)

ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டம் பகுதியளவில் வெற்றிபெற்றுவிட்டது. பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்‌ஷ நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடந்த திங்கட்கிழமை (09) விலகினார். அவர் பதவி விலகியவுடன் அரசாங்கமும் பதவி இழந்துவிட்டது. ஆனாலும், ஜனாதிபதி பதவியில் இன்னமும் கோட்டாபய ராஜபக்‌ஷவே இருக்கிறார். ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டத்தின் பிரதான கோஷமான ‘கோட்டாவை வீட்டுக்கு விரட்டுவோம்’  என்கிற விடயம் இன்னமும் முடிவின்றி தொடர்கின்றது. ராஜபக்‌ஷர்களை முற்றாக விரட்டும் வரையில், போராட்டங்களை முடித்துக் கொள்ளப் போவதில்லை என்பது தென் இலங்கை மக்கள் எழுச்சியின் செய்தி.

மஹிந்த உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எம்.பிக்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உட்பட 14 பேர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடைவிதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சஜித்தின் கோரிக்கை நிராகரிப்பு?

நான்கு நிபந்தனைகளின் கீழ் தான் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்பதாக தெரிவித்து, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவால் ஜனாதிபதிக்கு இன்று பகல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அவ்வாறு அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென எதிர்கட்சித் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த காலத்திற்குள் பதவி விலகுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தால், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரதமராக ரணில் 6.30க்கு சத்தியப்பிரமாணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, புதிய பிரதமராக இன்று (12) மாலை 6.30க்கு சத்தியப்பிரமாணம் செய்துக்​கொள்ளவுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் வைத்தே அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்படவுள்ளது. அதன்பின்னர், கொழும்பு-02 கங்காராமவில் மத வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் முக்கியஸ்தர்கள் பலரும் தங்களுடைய ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.  

’கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் ஓர் அறிவிப்பு

கொழும்பு, காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொலிஸார், நேற்றையதினம் (11) விசேட அறிவிப்பொன்றை விடுத்தனர்.

’எவ் வழியிலும் கட்டுப்படுத்துவோம்’ – சவேந்திர சில்வா

முப்படையினர் களமிறக்கப்பட்டு வீதித்தடைகள் ஏற்படுத்தி பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதால், அநாவசியமான முறையில் பொதுமக்கள் எவரும் வீதிகளில் நடமாட வேண்டாமெனவும், வன்முறைகளில் ஈடுபடுவோரை எந்தவொரு வழியிலும் கட்டுப்படுத்த பொலிஸாரும் முப்படையினரும் தயாராக உள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.