’எவ் வழியிலும் கட்டுப்படுத்துவோம்’ – சவேந்திர சில்வா

நீர்கொழும்பில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை இராணுவத்தினர் கட்டுப்பாட்டிற்குள்  கொண்டுவந்துள்ளதாகவும், இதனைப் பார்த்து எவரும்  வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதற்கு இடமளிக்க முடியாது. முப்படையினரும் வீதித்தடைகளை அமைத்துள்ளனர். அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் செல்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அநாவசியமான முறையில் வீதிகளில் நடமாட வேண்டாம். எமது கடமைகளுக்கும் இடையூறுகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

அமைதியான போராட்டங்கள் தற்போது வன்முறையாக மாறியிருப்பதாக தெரிவிக்கும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, வன்முறைகளில் ஈடுபடுவோரை எந்தவொரு வழியிலும் கட்டுப்படுத்த பொலிஸாரும் முப்படையினரும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவத்த அவர், 09, 10ஆம் திகதிகளில் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு நாம் முயற்சித்திருந்தோம். எனினும் தற்போது அமைதியான முறை சீர்குழைக்கப்பட்டு வன்முறைச் சம்பங்கள் அரங்கேற்றப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த கட்டாயமாக நடவடிக்கை எடுப்போம். நாட்டு மக்கள் அமைதியான முறையில் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதற்கான பொறுப்பு பொலிஸாருக்கும், இராணுவத்துக்கும் உள்ளது. எனவே வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக எந்தவொரு வழிகளிலும் செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார். வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக முப்படையினரும் பொலிஸாரும் செயற்படுவார்கள். எனவே பொதுமக்கள் வன்முறைகளில் ஈடுபடாது அமைதியான முறையில் செயற்பட வேண்டும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

You May Also Like

dailymirror.lkடயலொக், MAS மற்றும் Hemas ஆகியவற்றின் ஒன்றிணைவில் ‘மனிதநேய ஒன்றிணைவு’ அவசர நிவாரணம் வழங்கல் ஆரம்பம் dailymirror.lkடயலொக், MAS, Hemas மற்றும் சர்வோதய ஆகியன ஒன்றிணைந்து ‘மனிதநேய ஒன்றிணைவு’ நிவாரண திட்டம் dailymirror.lkகாட்டுப்பன்றி கறியின் இருண்ட யதார்த்தம்

RECOMMENDED

dailymirror.lkயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு dailymirror.lkஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021 dailymirror.lkயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு

  Comments – 0

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

பெயர்: மின்னஞ்சல்: உங்கள் கருத்து:

முப்படையினர் களமிறக்கப்பட்டு வீதித்தடைகள் ஏற்படுத்தி பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதால், அநாவசியமான முறையில் பொதுமக்கள் எவரும் வீதிகளில் நடமாட வேண்டாமெனவும், வன்முறைகளில் ஈடுபடுவோரை எந்தவொரு வழியிலும் கட்டுப்படுத்த பொலிஸாரும் முப்படையினரும் தயாராக உள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.