கூடங்குளம் அணு மின்நிலைய ஆதரவை விரிவுபடுத்தும் ரஷ்யா

நிவாரணத் தொட்டி என்பது அணுமின் நிலையத்துக்கான உபகரணங்களின் முக்கியமான கூறுகளில் ஒன்றாகும்.   இது வெப்பமூட்டும் முறைகள் மற்றும் உலையின் ஏனைய இயக்க முறைகளில் அழுத்தத்தை ஈடுசெய்தல் மற்றும் முதன்மை சுற்றுகளின் ஏனைய உபகரணங்களிலிருந்து வரும் நீராவியின் ஒடுக்கத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

15 மெற்றிக் தொன் நிறையும் 8 மீற்றர் நீளமும் 4 மீற்றர் உயரமும் 2.5 மீற்றர் விட்டமும் கொண்ட இதன் ஆயுட்காலம் 40 வருடங்களாகும்.

2003-2004 ஆம் ஆண்டுகளிலும் 1ஆம் மற்றும் 2ஆம் அணு உலைகளுக்கான பல உபகரணங்களை தயாரித்து ரஷ்யா அனுப்பியிருந்தது.

சமீபத்திலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின்  1ஆம் மற்றும் 2ஆம் அணு உலைகளுக்கு  நம்பகமான மற்றும் செலவு குறைந்த அணு எரிபொருளின் முதல் தொகுதிகளை ரஷ்ய நிறுவனம் வழங்கியிருந்தது.

6 அணு உலைகளைக் கொண்ட கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானத்தில்  ரஷ்யா ஈடுபட்டு வரும் நிலையில், 1,2 அணு உலைகள் 2013 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது.

3,5 மற்றும் 5,6ஆம் உலைகளின்  இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலைகளின் கட்டுமானப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறன்றன.

தளவாடங்கள் மற்றும் புவி-அரசியல் அபிவிருத்தியுடன் தொடர்புடைய சவால்கள் இருந்தபோதிலும், உக்ரைன் மோதலைத் தொடர்ந்து 3ஆவது உலையின் முக்கிய கட்டுமானப் பணிகளில் ரஷ்யாவினால் உதவ முடிந்தது.

நிறுவலுக்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், பொருத்துதல் செயல்பாடுகளின் எண்ணிக்கை மற்றும் கால அளவு குறைப்பு ஆகியவற்றின் காரணமாக திட்டத்தை செயல்படுத்தும் காலத்தை கணிசமாகக் குறைக்க முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.