ஓர் அஸ்தமனத்தின் உதயம்?

(இலட்சுமணன்)

போருக்குப் பின்னரான, இன்றைய தமிழ்த் தேசிய அரசியலின் அண்மைக்கால செல்நெறியானது, என்றுமில்லாத அளவு ஓர் இக்கட்டான சூழலுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. காரணம், ஐந்து கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளும் அதன் பின்னரான அரசியல் சூழலும் ஆகும்.

சீனா 70: வரலாறும் வழித்தடமும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உண்மைகள் கறுப்பு, வெள்ளையாக என்றும் இருந்ததில்லை. எமக்குச் சொல்லப்படுவதன் அடிப்படையிலேயே, நாம் முடிவுகளை வந்தடைகிறோம்; அதில் தவறில்லை. ஆனால், நமக்கு சொல்லப்படுபவை பற்றியும் அதன் உண்மைத் தன்மை பற்றியும் ஆராய்வது முக்கியமானது. அதனடிப்படையில், நாம் புதிய தகவல்களைப் பெறும்போது, எம்மைத் நாம் திருத்திக் கொள்வதற்காகத் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும்.

ஐந்து தமிழ் கட்சிகளின் சந்திப்பை சி.வி, சுரேஷ் புறக்கணிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக ஐந்து தமிழ் கட்சிகளும் இன்று (24) கொழும்பில் கூடவிருந்த நிலையில், வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரஷ் பிரேமசந்திரன் ஆகியோர் கலந்துகொள்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

காந்தி 150 ஆண்டுகள் பதிவு 145

திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் இருந்த சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை ஈழவர், புலையர் போன்ற தாழ்த்தப்பட்ட சாதியினர் பயன்படுத்தக் கூடாது, நடக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது.

‘அரசியல் கைதிகளின் விடுதலைக்கு கோட்டாபய ராஜபக்‌ஷ உறுதி’

வன்னி மக்கள் சார்பாக, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பில் முன்வைக்கப்பட்ட 20 அம்சக் கோரிக்கைகள் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவால் ஏற்றுக்கொள்ளப்படுவதாக, பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும் உடனடியாக முன்னெடுக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதையடுத்தே, கோட்டாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்தோம் எனத் தெரிவித்தார்.

‘தேர்தல் பற்றி கோட்டாபயவுடன் பேசப்போவதில்லை’

பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுடன், தேர்தல் பற்றிய எவ்விதப் பேச்சுவார்த்தைகளையும் தாம் மேற்கொள்ளப்போவதில்லை என, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இராஜரெட்னம் இராஜேந்திரா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சீரற்ற வானிலையால் புத்தளத்தில் 7,622 பேர் பாதிப்பு

தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, புத்தளம் மாவட்டத்தின் 12 பிரதேச செயலகங்களில் வசிக்கும் 2,233 குடும்பங்களைச் ​சேர்ந்த 7,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

கோட்டாவுக்கு எதிராக போராட்டம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டில் உள்ள காணாமற்போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் முன்னால், இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ். மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில், இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிந்திக்கணும் சீமான்

(த.ராஜன்)

சீமானிடம் வழக்கமாக வெளிப்படும் தெனாவட்டான பேச்சின் அடுத்தகட்ட நீட்சியாகியிருக்கிறது ராஜீவ் காந்தி கொலை குறித்து விக்கிரவாண்டி தொகுதியில் அவர் பேசியது. ராஜீவ் காந்தி தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது இன்னும் ஆறாத காயமாகவும், நம் தமிழக அரசியல் வரலாற்றில் நீங்காத கறையாகவும் தொடர்கிறது.

கனடா தேர்தல் முடிவு

வலதுசாரி பழமைவாத கட்சியின் தோல்வியும் லிபரலுக்கு மூக்கணாங் கயிறு போட்ட அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத வெற்றியும் கனடாவின் ஜனநாயகத்திற்கு நல்லது. இதுவே தேர்தல் முடிவாக வந்திருக்கின்றது