ஹெலித் தாக்குதலில் 42 அகதிகள் கொல்லப்பட்டனர்

யேமன் கரையோரத்தில், ஹெலிகொப்டர் ஒன்று, கடந்த வியாழக்கிழமை (16) படகொன்றைத் தாக்கியதில், 42 சோமாலிய அகதிகள் கொல்லப்பட்டதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மேற்படி சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொள்ளுமாறு, யேமனில் போரில் ஈடுபடும் சவூதி தலைமையிலான கூட்டணியை, சோமாலியா கோரியுள்ளது.

(“ஹெலித் தாக்குதலில் 42 அகதிகள் கொல்லப்பட்டனர்” தொடர்ந்து வாசிக்க…)

‘முல்லைத்தீவில் அதிவேக சிங்கள குடியேற்றம்’

“வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டமானது, மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், படையினருக்கான நில சுவீகரிப்புக்கள், கடல்வள சுறண்டல்கள், பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவ மயமாக்கல் போன்றவற்றினால் விழுங்கப்பட்டு வருகின்றது. முழுமையாக விழுங்கப்படுவதற்கு முன்னர், மாவட்டத்தையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(“‘முல்லைத்தீவில் அதிவேக சிங்கள குடியேற்றம்’” தொடர்ந்து வாசிக்க…)

கால அவகாசம் கேட்பது வெட்கக்கேடு’

“பிரச்சினைகளை நாட்டுக்குள் தீர்க்காது, வெளிநாடுகளிடம் சென்று கால அவகாசம் கேட்பது வெட்கக்கேடானது. வெளிநாடுகளால், உள்நாட்டுப் பிரச்சினைகள் அதிகரிக்குமே தவிர, ஒருபோதும் தீர்வை ஏற்படுத்த முடியாது” எனச் சுட்டிக்காட்டியுள்ள ஜே.வி.பி., “இன்றைய ஆட்சியாளர்கள் வெளிநாடுகளின் தாளத்துக்கு ஆட்டம் போடுகின்றனர்” எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

(“கால அவகாசம் கேட்பது வெட்கக்கேடு’” தொடர்ந்து வாசிக்க…)

அதிகாரிகள் முன்னிலையில் பரஸ்பர குற்றச்சாட்டு

“கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்குரிய காணியை, இராணுவத்துக்கு தன்னிச்சையாக, முன்னாள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளரும், தற்போதைய முல்லைத்தீவு மாவட்டச் செயலருமான ரூபவதி கேதீஸ்வரன், வழங்கினார்” என, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம்சாட்டினார். ஆனால், “இராணுவத்திடம் இருந்த கிளிநொச்சி மாவட்டச் செயலக காணியை அன்றைய சூழலில் மீளப்பெற்று, புதிய மாவட்டச் செயலகத்தை அமைத்தது நான்தான். இக்குற்றச்சாட்டு உண்மைக்கு புறமானது” என, நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு அதே மேடையில் வைத்து கடும் தொனியில் கேதீஸ்வரன் பதிலளித்தார்.

(“அதிகாரிகள் முன்னிலையில் பரஸ்பர குற்றச்சாட்டு” தொடர்ந்து வாசிக்க…)

காலில் விழுந்து கதறிய உறவினர்கள்

கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் காலில் விழுந்து, தங்களின் உறவினர்களை மீட்டுத்தருமாறு கதறி அழுதனர். இன்றுடன் 28 நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, இன்று காலை 7.45 மணியளவில், முதலமைச்சர் சந்தித்தார்.

(“காலில் விழுந்து கதறிய உறவினர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

என்றும் காந்தி!- 30: கருத்துச் சுதந்திரமில்லாக் காலத்துக்கு காந்தி!

சுதந்திரம் பெற்றதற்குப் பிந்தைய இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்துக்கு மோசமான காலகட்டங்களாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று, நெருக்கடி நிலை காலகட்டம், இன்னொன்று தற்போதைய காலகட்டம். கடந்த 70 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், பாஜக உள்ளிட்ட வலதுசாரிக் கட்சிகள் என்று எதுவுமே கருத்து சுதந்திரப் பரிசோதனையில் மிஞ்சாது. சல்மான் ருஷ்தியின் ‘சாத்தானின் பாடல்கள்’ (Satanian Verses) நாவலை காங்கிரஸ் அரசு தடைசெய்தது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ அரசு ஆண்டபோது தஸ்லிமா நஸ்ரினின் நாவலைத் தடைசெய்தது. பாஜக கட்சியும் சரி அரசுகளும் சரி அந்தக் கட்சி சார்பான அமைப்புகளும்சரி பல்வேறு புத்தகங்களுக்கும் பல்வேறு கலைஞர்களுக்கும் முட்டுக்கட்டை போட்டிருக்கின்றன. எம்.எஃப். ஹுசைன், சிவாஜியைப் பற்றிய ஜேம்ஸ் லைனின் புத்தகம் தொடங்கி பெருமாள் முருகன் வரை ஏராளமான உதாரணங்களைக் காட்டலாம்.

(“என்றும் காந்தி!- 30: கருத்துச் சுதந்திரமில்லாக் காலத்துக்கு காந்தி!” தொடர்ந்து வாசிக்க…)

இளையராஜாவின் இசை காப்புரிமை!!!!!? முழு தவறு எஸ்பிபி பக்கம்?????

இந்த காப்பிரைட் நோட்டீஸ் விவகாரத்தில் முழு தவறு எஸ்பிபி பக்கம் இருக்கிறது. இளையராஜாவின் இசை காப்புரிமையை கவனித்துக் கொள்ள இப்போது தனி குழு இருக்கிறது. அவர்கள் அனுப்பியதுதான் இந்த நோட்டீஸ் (நிச்சயம் ராஜாவுக்குத் தெரியாமல் அனுப்பப்பட்டிருக்காது). அதுகூட எஸ்பிபிக்கு அனுப்பப்பட்டதல்ல. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் ஈவன்ட் கம்பெனிக்கு அனுப்பப்பட்டது. இப்படி ஒரு நோட்டீஸ் வந்ததும் அதைப் பற்றி ராஜாவிடமே தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கலாம் எஸ்பிபி. அல்லது அந்த கம்பெனி நிர்வாகிகளை அனுப்பி பேச வைத்திருக்கலாம். காப்புரிமை சட்டப்படி ராஜாவுக்கு சேர வேண்டியதைத் தரச்சொல்லி இருக்கலாம்.

(“இளையராஜாவின் இசை காப்புரிமை!!!!!? முழு தவறு எஸ்பிபி பக்கம்?????” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீடிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு முன்வைத்த கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களின் பின்னர் இந்த நிராகரிப்பு தீர்ப்பு வழங்கப்பட்டமையின் மூலம், அந்த அமைப்பின் மீதான தடை நீடிக்கப்படுவதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
தாம் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் செயற்பட்ட அமைப்பு எனவும், புலிகள் அமைப்பின் சட்டதரணி விக்டர் கோபேயினால் வெளியிடப்பட்ட கருத்தை ஐரோப்பிய நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. லக்சம்பர்க் நகரத்தில் ஐரோப்பிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினால் புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்ந்து நீடிக்கும் என குறிப்பிடப்படுகின்றது. புலிகள் அமைப்பு தீவிரவாத செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என புலிகள் அமைப்பின் சட்டதரணி நீதிமன்றத்தின் முன் கருத்து வெளியிட்டிருந்தார் என திவயின தகவல் வெளியிட்டுள்ளது.

தீபாவை எதிர்த்து மாதவன் திடீரென களமிறங்க காரணம் பல்லாயிரம் கோடி ரூபாய் பேரம்…. பரபரப்புத் தகவல்கள்

தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் நடுவே ஏற்பட்ட பிளவுக்கு, பணப் பிரச்சினைதான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு ரத்த வாரிசு என்பது தீபக் மற்றும் தீபா ஆகிய அவரின் அண்ணன் பிள்ளைகள்தான். இதில் தீபக் ஆரம்பம் முதலே சசிகலாவுடன் இருந்தார். அவரை தனது தாய் போன்றவர் என புகழுரைத்து வந்தார். ஜெயலலிதாவின் சொத்துக்களை பகிர்வதில் தீபக் திருப்தியடைந்திருந்ததே இந்த நெருக்கத்திற்கு காரணம் என கூறப்பட்டது.

(“தீபாவை எதிர்த்து மாதவன் திடீரென களமிறங்க காரணம் பல்லாயிரம் கோடி ரூபாய் பேரம்…. பரபரப்புத் தகவல்கள்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை

தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனுக்காக 116 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட  தமிழ்நாட்டின் 2017-2018ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசாங்கத்தால்  சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு- செலவுத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.