விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீடிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு முன்வைத்த கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களின் பின்னர் இந்த நிராகரிப்பு தீர்ப்பு வழங்கப்பட்டமையின் மூலம், அந்த அமைப்பின் மீதான தடை நீடிக்கப்படுவதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
தாம் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் செயற்பட்ட அமைப்பு எனவும், புலிகள் அமைப்பின் சட்டதரணி விக்டர் கோபேயினால் வெளியிடப்பட்ட கருத்தை ஐரோப்பிய நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. லக்சம்பர்க் நகரத்தில் ஐரோப்பிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினால் புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்ந்து நீடிக்கும் என குறிப்பிடப்படுகின்றது. புலிகள் அமைப்பு தீவிரவாத செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என புலிகள் அமைப்பின் சட்டதரணி நீதிமன்றத்தின் முன் கருத்து வெளியிட்டிருந்தார் என திவயின தகவல் வெளியிட்டுள்ளது.