பெரியார் கண்ட கைம்பெண் கமலா அம்மா இற்கு அஞ்சலி

1933 இல் ஜனனம் 2020 நிரந்தர சயனம். இதற்கு இடையில் 25 வயதில் திருமணம் 32 வயதில் வாழ்க்கைத் துணையை இழந்து மூன்று சிறு குழந்தைகளுடன் விதவைக் கோலம்.

இந்தியா: கிராமங்களிலும் பரவும் தொற்று: அரசே, என்ன திட்டம்?

கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கையில் உலகின் மூன்றாவது இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது இந்தியா. கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மொத்த நோய்த்தொற்றுகளில் சுமார் 60% மஹாராஷ்டிரம், டெல்லி, தமிழ்நாடு மூன்றுமே கொண்டிருக்கின்றன. மூன்றிலுமே பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகம் என்பது போக, மூன்றுமே அதிகம் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்கள் என்பதும், மிக முக்கியமாக டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில் தொற்று அதிகமானதன் விளைவு இது என்பதும் ஆகும்.

இதை அப்படியே தலைகீழ் பார்வைக்கு உள்ளாக்கினால், இன்னும் 70% மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் கிராமப்புறங்களில் கிருமி பெரும் சூறாவளியாக மாறவில்லை. அப்படி மாறினால், இந்தியாவின் நிலை என்னவாகும்? இந்திய அரசும், மாநில அரசுகளும் இதற்கு என்ன திட்டத்தைக் கையில் வைத்திருக்கின்றன?

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், ஊரடங்குக்கு முன்னர் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகமாக இருந்த கிருமித் தொற்று இப்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவிவருவதை அரசின் புள்ளிவிவரங்களே சொல்கின்றன.

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கரோனாவுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அங்குள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு அதிகபட்சம் ஆயிரம் படுக்கைகள் வரையில் மட்டுமே நிர்வகிக்க முடியும். அப்படியென்றால், நிலைமை தீவிரமாகும்போது என்ன செய்வது? இதற்குத் தமிழக அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது?

அடுத்தடுத்த கிராமங்களை உள்ளடக்கிய ஒவ்வொரு தொகுப்புக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா சிகிச்சை அளிக்கத் திட்டமிடப்பட்டுவருவதாகத் தெரிகிறது. அப்படியான முடிவு எடுக்கப்பட்டால், அது மோசமான விளைவுகளையே உண்டாக்கும். ஏனெனில், தற்போது, கரோனா தவிர்த்த அனைத்து நோய்களுக்கான சிகிச்சைகளையும் அரசு மருத்துவமனைகளும் ஆரம்ப சுகாதார நிலையங்களும்தான் மேற்கொண்டுவருகின்றன. அவற்றையும் கரோனா பணியில் ஈடுபடுத்தும்போது மற்ற நோய்களுக்கான சிகிச்சைகள் தொடர்வதைக் கேள்விக்குறியாக்கிவிடும்.

மேலும், கரோனா போன்ற ஒரு கொள்ளைநோயை எதிர்கொள்வதற்கான கட்டமைப்பில் இருக்க வேண்டிய கச்சிதத்தன்மையையும் அது சிதறடித்துவிடும். இது கிருமிப் பரவலை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும். ஆக, மாவட்ட அளவில் நகரங்களுக்கு வெளியே பெரிய அளவிலான தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்குவதே விவேகமானது. ‘சானிடோரியம் முன்மாதிரி’ இதற்குப் பயன்படலாம். கால விரயம் இன்றி அரசு களத்தில் இறங்கட்டும். சுதாரிக்காவிட்டால் பேரழிவுக்கு கிராமங்கள் ஆளாகும்.

பெருந்தொற்றுக்குப் பிறகான உலகம் எப்படி இருக்கும்?

(நோம் சோம்ஸ்கி)

நம் உலகத்தில் புதிய தாராளவாதச் சூழலில் அதீதமாக்கப்பட்ட ஏற்றத்தாழ்வை இந்த கரோனா பெருந்தொற்று கூர்மையாக அம்பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில். அமெரிக்க நாட்டின் இனவாதக் குணத்தையும் வெளிக்கொணர்ந்துள்ளது. புதிய தாராளவாதக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு 40 வருடங்களுக்குப் பிறகான ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால், நாட்டின் ஒட்டுமொத்த வளத்தில் 20% வளத்தை 0.1 பங்கு ஜனத்தொகையினர் சேர்த்துள்ளனர். ஜனத்தொகையில் பாதிப் பேர், மைனஸ் மதிப்பில் உள்ளனர். 70% மக்கள், அரசின் நிதி உதவியை நம்பி வாழும் நிலை உள்ளது. பெரும்பாலான மக்கள், அன்றன்று வேலைக்கு எஜமானர் அழைப்பதை எதிர்பார்த்து வாழும் அபாயகரமான சூழலில் உள்ளனர். கறுப்பின மக்களின் நிலை இதைவிட மோசமானது. 400 ஆண்டு காலமாக நிலவும் கொடுமையின் எச்சங்கள் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

தமிழ்நாட்டை உலுக்கிய கொலைகளில் ஒன்றான உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தையும் பிரதானக் குற்றவாளியாகக் கருதப்பட்டவருமான பி.சின்னசாமியை சென்னை உயர் நீதிமன்றம் விடுவித்துத் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கீழ் நீதிமன்றத்தில் விரைவான விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தற்போது உயர் நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்டது மட்டுமல்லாமல், இந்தக் குற்றத்துக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, பட்டப் பகலில் சாலையில் பலர் பார்த்திருக்க 33 வெட்டுகளோடு நடத்தப்பட்ட இந்தக் கொலையில் சங்கருக்குச் சற்றும் பரிச்சயமில்லாத கூலிப்படையினர் ஐந்து பேரைத் தவிர ஏனையோருக்கு எந்தத் தண்டனையும் இல்லை. கூலிப்படையினரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் நாடு: கேள்வி எழுப்பி நிற்கும் கொலையும், கொலைக்கான தீர்ப்பும்

(சாகரன்)

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் நடைபெற்ற இரு சம்பவங்கள் என்னிடம் சில கேள்விகளை எழுப்பி நிற்கின்றன.

அமெரிக்காவின் மினிசோடாவில் கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் புளொயிட் வீதியில் வைத்து வெள்ளையின பொலிஸால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படமும், காணெளிக் காட்சிகளும் இதனை ஊடகத்துறையும், சமூக ஆர்வலர்களும், ஏன் மனித நேயச் செயற்பாட்டாளர்களும் உலகம் தழுவிய போராட்டமாக மாற்றினர். அப்போது நாம் நம்பிகையை அடைந்திருந்தோம் உலகில் அறம் மீட்கப்பட்டு காக்கப்படும் என்று.

சுருங்கும் ஜனநாயக இடைவெளி

கடந்த இரண்டு வாரங்களில், இலங்கையின் அவதானிப்பைப் பெற்ற நிகழ்வுகள் அனைத்தும், ஒரு விடயத்தை மிகத் தெளிவாகச் சுட்டி நிற்கிறது. இலங்கை, மெதுமெதுவாகத் தனது ஜனநாயக இடைவெளியை இழந்து வருகிறது. இப்போதைய கொவிட் 19 பெருந்தொற்று, அதற்கு வாய்ப்பாகியுள்ளது. அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் அச்சத்தை விதைக்கின்றன. மறுபுறம், இலங்கையின் எதிர்காலத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றன.

சேந்தன்.

சேந்தனின் நினைவுகள் மட்டும்தான் இனி. பழகியவர்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும் அவருடைய சுவையான சுவாரசியமான பேச்சுக்கள் கதைகள். பல்கலைகழகத்தில் பொறியியல் மாணவனாக பயின்றகாலத்தில் கவிதைகள் படைப் பதில் ஆர்வமாக இருந்தார். அதனால் அவருக்கு முற்போக்கு இலக்கிய வியாபாரிகள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதை முற்றாக தவிர்த்தார். அன்றைய காலகட்டத்தில் பேராசிரியர் இவருடைய திறமையை அறிந்து இவரைத் தேடி வீட்டுக்குப் போயிருந்தார். வீட்டுக்குள் இருந்த சேந்தனிடம் தந்தை பண்டிதர் வீரகத்தி சேதியைச் சொன்னார். சேந்தன் அந்த பே(ர்) ஆசிரியரை சந்திக்க விரும்பவில்லை. அதற்கு தந்தையார்,
‘பேராசிரியரடா’

தோழர் ‘சே’ இன் பிறந்த நாள் இன்று

(Sutharsan Saravanamuthu)

சக மனிதனை நேசிக்க தெரிந்த மனிதன் சேவுக்கு இன்று பிறந்த நாள், அவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இன்றுவரை வெளிநாட்டிலிருந்து வந்து இந்திய ஏழை விவசாயிகளை சந்தித்த ஒரே தலைவன் சே தான்,இலங்கைக்கு வந்து தேயிலை தோட்ட தமிழர்களை சந்தித்தார் .உலகிலே மலையக தமிழர்களை சந்தித்த ஒரே தலைவர் இன்றுவரை அவர் ஒருவர்தான், மலையகத்தில் சே தன் கையினால் நட்டுவைத்த மரம் இன்றும் உண்டு, சே இலங்கை வந்தார் என்ற விடயமே பல தமிழர்களுக்கு தெரியாது.

கடலிலிருந்து எடுத்ததைக் கடல் எடுக்கும்

(எம்.இஸட். ஷாஜஹான்)

நீர்கொழும்பு நகரம், மீன் பிடித்துறைக்குப் பெயர் பெற்ற நகரமாகும். நகருக்கு அழகு சேர்க்கும் வகையில், கடலும் களப்பும் அமைந்துள்ளன. இதன் காரணமாக, நகரின் இயற்கைமிகு காட்சிகள் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

அன்று பலாப் பழம்; இன்று அன்னாசிப் பழம்- தொடரும் யானைகளின் துயரம்

(கா.சு.வேலாயுதன்)

கேரளத்தில் அன்னாசிப் பழத்தில் வைக்கப்பட்ட வெடியால் கர்ப்பிணி யானை காயமடைந்து உயிரிழந்த சம்பவம், மிகப் பெரிய விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. வெடி அன்னாசிப் பழத்தில் வைக்கப்பட்டதா அல்லது தேங்காயில் வைக்கப்பட்டதா; யானைக்காக வைக்கப்பட்டதா அல்லது காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்டதா எனும் விவாதம் தொடங்கி, ‘மதவாத’ அரசியல் வரை பல்வேறு விவாதங்கள் எழுந்திருக்கின்றன.